வலங்கைமான் நண்பர்கள் அணி சார்பில் வெள்ள நிவாரணப்பணி!

இயற்கை ஆண், என்றும் பெண் என்றும் ஜாதி மத வேறுபாடு பார்ப்பது இல்லை. இயறகை தன்னகத்தே கொண்டுள்ள அழகையும், சீற்றத்தையும்  இந்த பூவுலகத்தில் ஏதேனும் ஒரு வகையில் திணிக்கிறது.
இந்த இயற்கையோடு   மனிதன் போராட முடியும். ஆனால் வெற்றி பெற முடியாது என்பது தான் உலக நியதி. இந்த இயற்கை சீற்றத்தின் பாதிப்பு உலகின் ஏதேனும் ஒரு பகுதியில்  அழிவை ஏற்படுத்துகிறது.

அத்தகைய பாதிப்பை அனுபவித்து துன்பப்படும் தமிழக மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் பல்வேறு நிவாரணப்பணிகளையும், நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது. 

இதில் வலங்கைமானில் உள்ள தெற்கு அகஹ்ரகாரம் நாடு நாராசம் சாலை  சேர்ந்த வலங்கைமான்‬ நண்பர்கள் சார்பில் கடலூரில்‬ பாதிக்கபட்ட மக்களுக்கு ‪‎உணவு‬ மற்றும் அத்தியாவசிய பொருள்களையும் மற்றும் துணி மணிகளையும் எடுத்து சென்று விநியோகத்தார்கள். 
Privacy and cookie settings