எரிமலைகள் பற்றிய அறிந்திராத பல உண்மைகள் !

உலகிலேயே, எரிமலைப் பாறை பியூமீஸ் என்னும் பாறை மட்டுமே தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. வெளிர் வெண்மை நிறத்தில் இருக்கும்

இந்த பாறைகள், எரிமலையின் போது வெடித்துச் சிதறி பின்பு குளிரும் பாறைகளி லிருந்து பல வாயுக்கள் வெளியாவ தால் ஏற்படும் ஓட்டை களைக் கொண்டது!

உலகிலேயே மிக பயங்கர மான எரிமலைகள் சூப்பர் எரிமலைகள் எனப்படு கின்றன!

இவை வெடித்துச் சிதறும் போது, பல்லாயிரம் மைல்களு க்கு அப்பாலும் தீமழை பொழிவ தோடு,

உலகளாவிய பருவநிலை ( தட்ப வெட்ப ) மாற்றங் களையும் உருவாக்கும் தன்மை கொண்ட வையாம்.

இவ்வெரி மலைகள், சில லட்ச வருடங் களுக்கு ஒரு முறை தான் வெடிக்கு மாம்.

உலகின் மிகப்பெரிய எரிமலை, இந்தோனேஷியா வின் சும்பாவா ( Sumbava ) தீவில் உள்ள, டாம்போரா ( Tambora ) மலையில் தான் வெடித்ததாம்.

1815 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரிமலைக்கு, ஒரு லட்சம் மக்கள் பலியானார் களாம்! 

உலகின் மிகப் பெரிய எரிமலைகள், இந்தோனேஷியா வில் சுமார் 76 இருக்கி ன்றன என்கிறது அமெரிக்கா வின் ஒருஆய்வு!

பெரும் பாலான எரிமலைகள், பூமியின் மேற் புறத்தின் விளிம்புகளில் தான் ஏற்படுகி ன்றனவாம்.

ஆனால், சூப்பர் எரிமலைகள் பூமியின் ஆழ் பகுதிகளில் தீக்குழம்பு களுடன் மறைந்திருக் கின்றன வாம்.

உலகின் தீ-பனிக்கட்டி நாடு என்றழைக் கப்படும் ஐஸ்லாந்து நாடு, எரிமலை களின் மேலேதான் உட்கார்ந்து இருக்கிறதாம்?!. 

2010 ஏப்ரலில் ஏற்பட்ட Eyjafjallajokull volcano என்னும் எரிமலை, 1783 ஆம் ஆண்டின்

ஸ்கப்டார் ( Skaptar ) மலையில் ஏற்பட்டு, ஐஸ்லாந்து நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு மக்களையும்,

விளை நிலம் மற்றும் மீன்பிடி குளங் களையும், காவு வாங்கிய எரிமலையை விட அளவில் சற்றே சிறியதாம்!

கடந்த 1991 ஆம் ஆண்டு, பிலிப்பின்ஸ் நாட்டின், பினாடூபோ (Pinatubo) மலையில் வெடித்துச் சிதறிய எரிமலை,

22 மில்லியன் டன் சல்ஃபர் டை ஆக்சைடு என்னும் வேதிப்பொருளை ( அமிலம் ) கக்கியதோடு,

உலகின் வெப்ப நிலைவயில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவிற்க்கு குறைத்து விட்டதாம்?!

அடேங்கப்பா….!!

எரிமலைகள் வளரும் தன்மை யுடையனவாம்! 

லாவா குழம்பும், சாம்பலும் சேர சேர, எரிமலை களுக்கு அவை, பல்வேறு படிமங் களையும், உயரத்தையும் ஏற்படுத்தி விடுமாம்.

இப்படித் தான் பல மலைகளும் உருவா கின்றன என்கிறது அறிவியல் ஆய்வு! எரிமலைகள் முற்றிலும் அழிந்தும் போகக்கூடிய தன்மை உடையவை யாம்! 

எரிமலை களின் சக்தியானது, மாக்மா (Magma) குழம்புகளை ஒரு மிகப்பெரிய கிண்ணம் போன்ற வடிவத்தில் உருவாக்கி விடும் தன்மை கொண்டவை யாம்.

இவற்றை கால்டெரா ( Caldera ) என்கிறார்கள் ஆங்கிலத்தில்! உலகின் மிகப்பெரிய எரிமலை யானது ஹவாயின் “மாய்னா லோவா ( Mauna Loa )” தானாம். 


ஹாவாயின் 5 எரிமலை களுக்குள் ஒன்றான இது, கடல் அளவிலிருந்து 13,000 அடி உயரத்தில் இருக்கிறதாம்.

ஹவாய் தீவுகளே இத்தகைய எரிமலை களால் உருவானவை தானாம். எரிமலைகள், சூரியன் மறைவை மிக வண்ணமய மாக்கி விடுமாம்! 

கடந்த 2008 ஆம் ஆண்டு, அலாஸ்கா வின், காசாடோச்சி ( Kasatochi ) எரிமலை வெடித்துச் சிதறிய போது,

உலக மக்கள் அனைவரும் வித்தியாச மான, அசாதா ரணமான அழகுடன் ஆரஞ்சு வண்ண சூரியன் மறைவை காண முடிந்ததாம். 

இம்மாதிரி யான நிகழ்வு, எரிமலையின் சாம்பல்கள் சூரியக் கதிர்களுடன் இணையும் போது ஏற்படு பவையாம்!
Tags:
Privacy and cookie settings