கான்வென்ட் கிணற்றில் பிணமாக கிடந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி

1 minute read
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வஹமோன் அருகே உள்ளது உலுப்போனி இங்கு கத்தோலிக்க கான்வென்ட் உள்ளது.  இந்த கான்வென்டில் ஸ்டெல்லா மரியா என்ற 35 வயது பெண் கன்னியாஸ்திரியாக சேவை செய்து வந்தார்.
இன்று காலை அந்த கான்வெண்டில் உள்ள கிணற்றில் கன்னியாஸ்திரி மரியா பிணமாக மிதந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது போலீசார் விரைந்து வந்து கன்னியாஸ்திரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

போலீசார் தங்கள் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர் விசாரணையில்  சமீப காலமாக கன்னியாஸ்திரி மரியா மனஅழுத்ததில் இருந்தார் என கூறப்படுகிறது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம்  கோட்டயம் மாவட்ட பால கான்வென்டில் 69  வயது கன்னியாஸ்திரி ஒருவர் கொலைசெய்யபட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.

இது போல் 1992 ஆம் ஆண்டு  கத்தோலிக்க கன்னியாஸ்திரி 19 வயது அபயா கோட்டயத்தில் உள்ள கன்வென்டில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்

இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து அது கொலை என கண்டறிந்து கடந்த 2009 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் இரண்டு பாதிரியார்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்  என்பது குறிப்பிட தக்கது.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings