வங்கி சேவையை பயன்படுத்தும் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை !

வங்கியில் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் பல நாட்கள் ஆகும் என்ற நிலை மாறி, இருந்த இடத்திலேயே நொடி பொழுதில் பரிமாற்றம் செய்யும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


மேலும் வங்கிகளும் வாடிக்கை யாளர்களை ஈர்க்க பல தரப்பட்ட வசதிகளை தருகின்றனர். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் வங்கி கணக்கு, மொபைல் வங்கி கணக்கு இன்னும் பல வசதிகள் இதில் அடக்கம். 

ஆன்லைன் அல்லது செல்போன் மூலம் வங்கி சேவைகள் துவங்கி யதிலிருந்து வாடிக்கை யாளர்கள் சுலபமான முறையில் தங்கள் வங்கி கணக்குகளை பயன்படுத்தவும்,

கணக்கு வழக்குகளை மேம் படுத்தவும் மற்றும் பற்பல நன்மை பயக்கும் வண்ணம் பிற சேவைகளைப் பெறவும் வசதியாக அமைந்துள்ளது.  ஆனால் இதிலும் சில சிக்கல்கள் உள்ளது இணைய திருட்டு திறமை படைத்த திருடர்கள் உட்கார்ந்த இடத்தலேயே

பிறரின் வங்கி கணக்கிற்குள் நுழைந்து பணத்தை திருட இந்த உலகத்தில் பல பேர் உள்ளனர். இவர்களிடம் இருந்து நம் பணத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. 
இத்தகைய இணைய சேவைகளை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கை யையும், பாதுகாப்பு முறை களையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

மொபைல் போன் மூலம் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு சேவைகளை பயன்படுத்தும் போது எடுக்க வேண்டிய எச்சரிக்கை வழி முறைகளில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம். 

படித்து பயன்பெறுங்கள்.. 

பாஸ்வேர்ட் லாக் உங்கள் மொபைல் போனை மற்றவர்களும் உங்களுடைய அனுமதியின்றி பயன்படுத்தா தவாறாக அதை இரகசிய பாஸ்வேர்ட் மூலம் லாக் செய்து வைக்கலாம். 

இதுவே முதற்கட்ட பாதுகாப்பு முறையாகும். மொபைலின் MPIN மொபைலின் MPIN (Mobile-Personal Identification Number) என்ற இந்த எண்ணை போன் மூலம்

வங்கி சேவையை பயன்படுத்த விரும்பு வோருக்கு தனிபட்ட முறையில் வங்கி தந்திருக்கும் இதை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். 


இந்த எண்னை பயன்படுத்தும் போது பொதுவாக யாரும் இல்லாத சமயத்தில் உபயோகிப்பது நல்லது. வங்கிகளும் மும்முறைக்கு மேல் தவறான MPIN பதிவு செய்தால் அந்தபோனின் வங்கி சேவையை நிறுத்தி விடுகின்றனர். 

அங்கிகரி க்கப்பட்ட மென்பொருள் வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட சாப்ட்வேர் பயன் படுத்துதல் வங்கிகள் போனிலிருந்து தங்கள் அக்கவுன்டை இயக்குவதற் கான வங்கியின் அங்கிகரிக்கப் பட்ட சாப்ட்வேரை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். 

வங்கிகள் உங்களுடைய பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில் இத்தகைய சேவையை அளித்துள்ளது. லாக் ஆப் எந்த ஒரு வங்கி சேவையை பயன்படுத்தி னாலும் அந்த வேலை முடிந்தவுடன்

லாக் ஆப் செய்து முற்றிலும் அந்த சேவையி லிருந்து வெளியே வந்து விடவும். இரகசியம் காத்தல் நல்லது வங்கி சேவை தொடர்பான எந்த ஒரு முக்கிய தகவல்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

வங்கி குறிப்பிட்ட வாடிக்கை யாளர் அடையாள எண், MPIN, அக்ககவுண்ட் நம்பர் ஆகியவற்றை யாரிடமும் கூறாமல் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.  அய்யய்யோ! என் போனை காணோம்! போனையோ அல்லது


உலக அழகியாக மெக்சிகோவின் வனசா பொன்ஸ் !
சிம் கார்டையோ தெலைத்தால் செல்போன் வங்கி சேவையை ரத்து செய்யுங்கள். மேலே குறிப்பிட்டவாறு எந்த செயலை செய்தாலும் உடனடியாக வங்கியிடம் தகவல் அளித்து இச்சேவையை உடனே நிறுத்தி விட வேண்டும். 

இமெயில், எஸ்எம்எஸ் வேண்டாம் இமெயில், எஸ்எம்எஸ் மூலமாகவும், உங்களுடைய வங்கிக் கணக்கை பயன் படுத்தாதீர்கள். பாஸ்வேர்ட் மாற்றம் MPIN மற்றும் மொபைல் வங்கி சேவையின் ரகசிய பாஸ்வேர்ட் ஆகியவற்றை அவ்வப்போது மாற்றுவது உகந்தது.
Tags:
Privacy and cookie settings