கிழக்கு பிரான்ஸில் ரயில் தடம்புரண்டு விபத்து !

கிழக்கு பிரான்ஸ் நகரமான ஸ்ட்ராஸ்பார்க் நகருக்கு அருகாமையில், அதிவேக TGV ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறித்த விபத்தானது புதிய பரிஸ் – ஸ்ட்ராஸ்பார்க் ரயில்வே தடத்தில், Eckwersheim நகரத்தில் குறித்த ரயில் சோதனை ஓட்த்தில் ஈடுபட்டிருந்த போதே இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. குறித்த ரயிலில் 49 ரயில்வே தொழில்நுட்பவியலாளர்கள் பயணித்துள்ளனர்.
இதன்போது ரயில் தடம்புரண்ட சமயத்தில் ரயில் தீப்பற்றியது. இவ்விப த்தில் 11 பேர் கடும் தீக்காயங் களுக்கு இலக்காகி, கவலைக் கிடமான நிலையில் மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு ள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. 

குறித்த ரயில் அதிக வேகமாகப் பயணி த்ததன் காரண மாகவே, குறித்த விபத்து நிகழ்ந்துள் ளதாக ஆரம்பக் கட்ட விசாரணை களில் இருந்து தெரியவந் துள்ளதாக அதிகா ரிகள் தெரிவிக்கி ன்றனர்.

சம்பத்தில் உயிரிழந்த வர்களின் சடலங்கள் தண்டவாள தடத்தின் ஒரு பகுதியில் சிதறிய நிலையில் கண்டெ டுக்கப்பட் டுள்ளன. பரிஸ் – ஸ்ட்ரா ஸ்பார்க் நகருக்கு இடையிலான அதிவேக ரயில் போக்கு வரத்து தடம் அடுத்த வருடம் திறக்கப் பட்டு நடவடி க்கைகள்

 முன்னெ டுக்கப்படவு ள்ளதாக திட்ட மிடப்படடி ருந்தது. இதற்கான பரீட்சாத்த நடவடி க்கையின் போதே இந்த விபத்து சம்பவித்து ள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 

குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திற்கு பிரான்ஸின் பிரதி போக்குவரத்து அமைச்சர் அலன் விடாலைஸ் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் செகோலென் ரோயல் போன்றோர் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.
Tags:
Privacy and cookie settings