சென்னை விமானங்களுக்குள் பாம்புகள், விஷசப் பூச்சிகள் !

சென்னையை அச்சுறுத்திய வரலாறு காணாத வெள்ளத்தில் விமான சேவைகள் உள்ளிட்ட அனைத்து போக்கு வரத்து நடவடிக் கைகளும் இடை நிறுத்தப் பட்டிருந்தன. 
இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க காலதமாத மாகும் என விமான போக்கு வரத்துத் துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித் துள்ளார்.

இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான நிலையத்தில் சேவைகளைத் துவக்க சிக்கல் ஏற்பட்டு ள்ளதாக மகேஷ் ஷர்மா செய்தியா ளர்களிடம் கூறினார். 

விமான நிலையத்தின் ஓடுத் தளங்களில் வெள்ளம் வடிந்துள்ள போதும், அதன் முழுமையான பாதுக்காப்புத் தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே சேவைகள் தொடங் கப்படும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார். 

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானங் களில், பாம்புகள் உள்ளிட்ட எண்ணற்ற விஷப் பூச்சிகள் காணப்ப டுவதாக செய்திகள் தெரிவிக் கின்றன.

இதன் காரணமாகவே பயணிகளின் முழுமையான பாதுக்காப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக கூறப் படுகிறது.

இதே வேளை சென்னை எழும்பூரி லிருந்து தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவைகள் இன்று காலை முதல் துவக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் சென்னையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளின் சேவை முழுமையாக இலவசம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார். 

இன்று சனிக்கிழமை முடல வரும் செவ்வாய்கிழமை வரையில் இந்த உள்ளூர் இலவச பேருந்து சேவைகள் வழங்கப்படும். சென்னை கடற்கரை ரயில் நிலையத் திலிருந்து வட மாவட்டங் களுக்கான சிறப்பு ரயில் சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
Tags:
Privacy and cookie settings