மீண்டும் மேகி..! எப்படி இருக்கிறது சுவையும் தரமும்?

நீதிமன்ற தடை, கலாட்டாக்களுக்குப் பிறகு மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது. சீஸன் 2 - மேகி நூடுல்ஸ் எப்படி இருக்கிறது? மேகி பாக்கெட்டில் எந்த வித்தியாசமும் இல்லை.
 
அதே மஞ்சள் நிற பேக்கிங். வழக்கமான செய்முறை, விதிமுறைகள்தான். விலை ரூ.? உள்ளே இருக்கும் நூடுல்ஸ் வழக்கத்தைவிட சற்றே பளிச்சென இருக்கிறது.

பாக்கெட்டின் உள்ளே டேஸ்ட் மேக்கர் பாக்கெட் இருக்கிறது. அதை நூடுல்ஸுடன் கலக்கி தேவைப்படும் நீர் ஊற்றி இரண்டே நிமிடங்கள் சமைத்தால், வழக்கமான நிறம், மணம், குணத்துடன் இருக்கிறது மேகி. 
சாப்பிட்டுப் பார்த்தால் வழக்கமான ஸ்பைஸி சுவை. வழக்கம் போல அப்போதைக்கு பசியைத் தள்ளிப் போடுகிறது. மற்றபடி குறிப்பிடும்படியான மாற்றமும் விசேஷமும் இல்லை. மேகி பிரியர்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கும்!
Tags:
Privacy and cookie settings