இசுலாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித ஹஜ் பயனம் மேற்கொல்வதற்கு மாணியம் வழங்கப்படும் என்று அரசு அறிவிக்கின்ற போதெல்லாம் இசுலாமிய தீர்த்தாடகரை அரசு இலவசமாக மக்காவுக்கு அனுப்பி வைக்கிறது
என்றும் தீர்த்தாடகர்களுக்கு என்று பெரும் தொகையை அரசு ஒதுக்கி வைக்கின்றது என்றே அனைவரும் அறிந்து வைத்து இருக்கின்றனர்.
இதையே ஆதாராமாக்கி இந்து அமைப்புகள் இசுலாமியர்கள் சிறுபான்மையினர் என்ற சலுகையில் இந்துக்கள் செலுத்தும் வரிப்பணத்தை அபகரித்து தங்களது மத சடங்களுக்கு செலவழித்து கொள்கின்றனர் என்றும் குற்றசாட்டி வருகின்றனர் .
உண்மை என்னவென்றால் ஹஜ் தீர்த்தாடகர்களுக்கு என்று ஒரு நயா பைசா போலும் அரசு தன் பணத்திலிருந்து செலவிடுவதில்லை...அதே போன்று தனியார் ஹஜ் குழுக்கள் வழியாக செல்லும் ஹஜ் தீர்த்தாடகர்களுக்கு எந்த ஒரு மாணியமும் அரசு வழங்குவதுமில்லை! அப்படி என்றால் மாணியம் என்றால் என்ன?
இது யாருக்கு செலவிட படுகிறது? எப்படி செலவிடபடுகிறது? ஏன் இதனை இசுலாமியர்களுக்கு மாணியம் என்று அறிவிக்கிறார்கள்? மாணியம் என்றால் என்ன? மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழில் இயங்கும் ஹஜ் கமிட்டி மூலமாக மக்காவுக்கு செல்லும் இசுலாமிய ஹஜ் தீர்த்தாடகர்கள்..
பயண செலவு,தங்குமிடம்,சாப்பாடு என்று சுமார் ஒன்னேகால் லட்ச ரூபாயை ஹஜ் கமிட்டிக்கு கட்டணமாக செலுத்துகின்றனர். இதில் விமாண கட்டணம் ரூபாய் 16,000-ரூபாயும் அடங்கும்.(முன்னர் இது 12,000 ரூபாய்). இது நிலை நிறுத்த பட்ட தொகையாகும்.
இதை விட அதிகமாக விமான கட்டணம் வருமேயானால் அதனை அரசு ஏற்கும்..இதுவே மாணியமாகும். (சரி அரசு ஏன் இதனை ஏற்கிறது....கீழே விளக்கமுண்டு) தமிழகத்தை சேர்ந்த ஹஜ் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்தே பயணம் மேற்கொள்கின்றனர்.
சென்னை ஜித்தா- சென்னை விமான பயண கட்டணத் தொகை ரூபாய் 17,300 இது ஏர் இந்தியா விமானத்தின் கட்டணமாகும். ஜெட் ஏர்வேஸின் கட்டணம் 14 ஆயிரம் ரூபாய். (சீசன் நேரத்தில் நம் கழுத்தை நெறிக்கும் விமான நிறுவனங்களின் கட்டண விகிதம் அல்ல இது...இயல்பான கட்டணம் இது)
இதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு தீர்த்தாடகருக்கு இந்த வருடம் அரசு தர வேண்டிய மாணிய தொகை ரூ 1,300 மாத்திரமே! அதுவே ஜெட் ஏர்வேஸில் செல்வதாக இருந்தால் அரசு ஒவ்வெரு தீரததாடக்ருக்கும் 2000 திருப்பி தரவேண்டும்.
சரி,ஒன்னேகால் லட்ச ரூபாய் செலவு செய்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இசுலாமியர்கள் மாணியமாக தரப்படும் ரு1,300த்தை தங்களால் செலுத்த முடியாத நிலையிலா இருக்கிறார்கள்?
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள தங்களின் சொந்த பணமே பயன் படுத்த வேண்டும் என்று இசுலாமிய மார்க்கம் அறிவுறுத்தும் வேளையில் எதற்க்கு இந்த அரசின் அந்நிய பணம்?
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள தங்களின் சொந்த பணமே பயன் படுத்த வேண்டும் என்று இசுலாமிய மார்க்கம் அறிவுறுத்தும் வேளையில் எதற்க்கு இந்த அரசின் அந்நிய பணம்?
ஹஜ்ஜிற்க்கு என்று செலவழிக்கும் தொகைகள் அனைத்தும் எங்களுக்கு என்று பாத்திய பட்ட ஒன்று என்றும் எங்களுக்கு ஹஜ் மாணியம் வேண்டாம் என்றும் இஸ்லாமியர்கள் காலம் காலமாக குரல் கொடுத்து வந்தும் அரசு இதனை செவி கொள்வதில்லையே ஏன்?
மாணியம் கொடுத்தே தீருவோம் என கங்கணம் கட்டி கொண்டு இசுலாமியர்களுக்கு அரசு ஏன் மாணியம் கொடுக்க வேண்டும்? இங்கே தான் மத்திய அரசு மிக பெரிய சதி ஒன்றினை இசுலாமியர்களுக்கு எதிராக சத்தமின்றி அரங்கேற்றுகிறது,
பொது சமூகத்திற்க்கும் ஒரு தவறான கருத்தினை பரப்புகிறது! நிர்வாக திறமையின்மையால் நொடித்து சிறகொடிந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கடனில் இருந்து கரை ஏற்ற அரசு கண்ட ஒரு மார்க்கம் தான் இந்த இசுலாமியர்களுக்கு ஹஜ் மாணியமாகும்!
ஹஜ் மாணியம் என்ற பெயரில் ஏர் இந்தியாவிற்க்கு மிகப் பெரும் தொகையினை அள்ளியும் தருகிறது அரசு.. கடந்த ஆண்டுகளின் கணக்குகளை சரி பார்த்தால் எளிதில் நமக்கு ஒரு உண்மை விளங்கும்!
2008ஆம் ஆண்டு ஹஜ் மாணியம் என்ற கணக்கில் 770 கோடி ரூபாயை அன்றைய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்க்கு வழங்கி இருக்கிறது.அதற்கு முந்தைய வருடம் 595 கோடி ரூபாய்களை வழங்கியிருக்கிறது.
(2009 முதல் உள்ள கணக்குகள் வெளியிடப் படாமல் அரசால் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது. ஹஜ் கோட்டா மற்றும் ,மத்திய அரசால் அணுப்பி வைக்கப்படும் நட்பு ரீதியான ஹஜ் குழு,தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்
மறைத்து வைக்கப்பட்ட கணக்குகள் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி வெளியாகும் என்று நமபலாம்) 2008 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து பத்தாயிரம் ஹஜ் தீர்த்தாடகர்கள் ஹஜ் கமிட்டி வழியாக மக்காவுக்கு சென்றிருக்கிறார்கள்.
(2009 முதல் உள்ள கணக்குகள் வெளியிடப் படாமல் அரசால் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது. ஹஜ் கோட்டா மற்றும் ,மத்திய அரசால் அணுப்பி வைக்கப்படும் நட்பு ரீதியான ஹஜ் குழு,தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்
மறைத்து வைக்கப்பட்ட கணக்குகள் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி வெளியாகும் என்று நமபலாம்) 2008 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து பத்தாயிரம் ஹஜ் தீர்த்தாடகர்கள் ஹஜ் கமிட்டி வழியாக மக்காவுக்கு சென்றிருக்கிறார்கள்.
இவர்களுக்காக மாணியம் என்ற பெயரில் 770 கோடி ரூபாய்களை மத்திய அரசு செலவழித்து இருக்கிறது.இதன் அர்த்தம் ஒவ்வொரு தீர்த்தாடகரின் பெயரிலும் 70,000/ ரூபாயகளை விமான நிறுவனங்களுக்கு அரசு செலுத்தி இருக்கிறது என்று பொருள்படும்.
சென்னையிலிருந்து ஜித்தாவுக்கான தொலைவு 4446 கிலோமீட்டர்கள் ஆகும்.என்னதான் விமான கட்டணத்தை அதிக அளவில் உயர்த்தினாலும் கூட சென்னை ஜித்தாவுக்கு சென்று வர 70,000/ ரூபாய்கள் தேவையில்லை என்பது யதார்த்தமான உண்மை.
அதேநேரத்தில் விமான சேவையில் உலகின் முன்னனி விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமானத்தில் கூட சென்னையிலிருந்து நியூயோர்க் சென்று வர கட்டணமாக 60,000 ரூபாய்கள் தான் வசூலிக்கிறார்கள் என்பதும்..ஜெட் ஏர்லைன்ஸில் 55,000 ரூபாய்கள் தான் வசூலிக்கிறார்கள் என்கிற போது...
எதன் அடிப்படையில் சென்னை ஜித்தாவுக்கு சென்று வர 70,000 ரூபாய்களை மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்க்கு தூக்கி கொடுக்கிறது? அதுவும் விமான கட்டணத்தை ஒவ்வொரு தீர்த்தாடகரிடமிருந்தும் வசூலித்தும் கூட எதன் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இத்தகைய பெரும் தொகையை அரசு கொடுத்தது?
ஏர் இந்தியா நிறுவனமும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸும் ஒப்பந்த அடிப்படையில் பயணிகளை ஏற்றி செல்லும் வேளையில் தேசிய விமான நிறுவனம் என்ற பெயரில் அரசு கொடுக்கும் மாணியம் ஏர் இந்தியா நிறுவனத்திற்க்கு மட்டும் தான் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
2011 ஆம் ஆண்டு ஹஜ் கமிட்டி வழியாக சென்ற ஒரு லட்சத்து பத்தாயிரம் தீர்த்தாடகர்களில் வெறும் பத்தாயிரம் தீர்த்தாடகர்களை மட்டுமே ஏர் இந்தியா விமான நிறுவனம் கொண்டு சென்றது..மீதமுள்ள ஒரு லட்சம் தீர்த்தாடகர்களை சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கொண்டு சென்றது.
ஆனாலும் மாணியம் என்ற பெயரில் பல நூறு கோடி ரூபாயகளை ஏர் இந்தியா நிறுவனத்திற்க்கு அன்றைய அரசு அள்ளி கொடுத்தது என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்க வேண்டி வரும் என்றாலும் ஹஜ்ஜிற்க்கு செல்லுபவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்லர்.
ஹஜ்ஜிற்க்கு செல்லுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளே.. மத்திய அரசு இசுலாமியர்களுக்கு மாணியம் வழங்குகிறோம் என்ற போர்வையில் ஏர் இந்தியாவின் கடன்களை மீடக அப்பாவி இசுலாமியர்களை ஏமாற்றுவதோடு பிற சமூக மக்களிடம் ஒரு தவறான தகவலையும் பரப்புகிறது.
இசுலாமியர்களுக்கு ஹஜ் மானியம் வேண்டாம்.., அது தேவையுமில்லை அதற்கு பதிலாக; *விமான சேவையுடன்,நிறுத்தி வைக்கப்பட்ட கப்பல் சேவையினை மீண்டும் தொடங்க வேண்டும்..
பொருளாதரத்தில் நலிவுற்ற ஏழை இசுலாமியர்களுக்கு கப்பல் சேவை மிக பயனுள்ளதாக அமையும். விமான கட்டணத்தை ஏல முறையில் உறுதிப்படுத்த வேண்டும்..இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் உள்ள விமான நிறுவனங்களை கட்டண ஏலத்தில் பங்கெடுக்க செய்ய வேண்டும்.
ஊடகங்கள் வழியாக ஹஜ் விமான கட்டண ஏல முடிவுகளை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் தற்போது நிச்சயித்திருக்கும் பயண கட்டணமான 16,000/ ரூபாய் குறைவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. விமான கட்டணங்கள் குறையும் பட்சத்தில் ஹஜ் மாணியம் என்ற திட்டம் செயல் இழந்தும் போகும்.
இதன் மூலம் தேவையற்ற சர்ச்சையும் இல்லாமல் போகும்!!! மத்திய அரசு துணியுமா..? அல்லது இசுலாமியனுக்கு ஹஜ் மாணியம் என்று பெயரில் மீண்டும் இசுலாமியனையும் பொது சமூகத்தையும் ஏமாற்றுமா...?