இங்கிலாந்திலிருந்து வந்து தங்கிஇருக்கும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை :தமிழ் சினிமாவில் இங்கிலாந்திலிருந்து வந்து இங்கிருக்கும் முன்னணி நடிகைகளுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் எமி ஜாக்சன்.
மற்ற ஹிந்தி நடிகைகளைக் காட்டிலும், தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு துளியும் மாற்றம் இல்லாமல் அதை அப்படியே தமிழ் வசனமாக உச்சரிக்கிறாராம். இன்னும் கொஞ்ச நாட்களில் அவர் சொந்தக் குரலில் டப்பிங் பேசினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
விஜய்யுடன் பெயரிடப்படாத படம், தனுஷுடன் ‘தங்க மகன்’, உதயநிதியுடன் ‘கெத்து’ ஆகிய படங்களை முடித்துவிட்ட எமிக்கு ‘தங்கமகன், கெத்து’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளி வர உள்ளன.
ஹிந்தியில் எமி நடித்து வெளிவந்த ‘சிங் இஸ் பிளிங்’ படம் வெளிவந்து வெற்றி பெற்ற பின் அங்குள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்கள் பார்வையும் எமி பக்கம் திரும்பியுள்ளதாம்.
பல புதிய பட வாய்ப்புகள் அவரைத் தேடி வர ஆரம்பித்துள்ளன. நாம் ஏற்கெனவே சொன்னபடி மும்பையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த எமி இரண்டு நாட்களுக்கு முன் அங்கு குடி புகுந்துவிட்டாராம்.
விரைவில் சொந்தமாக ஒரு வீட்டை மும்பையில் வாங்க வேண்டும் என்பதுதான் எமியின் லட்சியமாம். அதற்காக இப்போதே பணத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். மும்பையில் புதிதாக நடனப் பயிற்சி வகுப்பிலும் சேர்ந்துள்ளாராம்.
டிசம்பரில் ரஜினிகாந்துடன் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பில் எமி ஜாக்சன் கலந்து கொள்ள உள்ளார். அதன் பின் மும்பைக்கும் சென்னைக்கும் பறப்பதே எமிக்கு முக்கிய வேலையாகிவிடும்.