இவ்வருட உலக அழகு ராணி போட்டியில் நியூஸிலாந்து சார்பாக ஒரு மருத்துவர் பங்கு பெற்றிருந்தார். ஆனால், இப்போட்டியில் விசேட திறமைக்கான சுற்றில் நியூஸிலாந்து றக்பி வீரர்களின் பாணியில் ஹக்கா நடனமாடி வியக்க வைத்தார்.
அமெரிக்காவில் நடைபெறும் பிரபஞ்ச அழகுராணி (மிஸ் யூனிவர்ஸ்) போட்டி களில் பங்கு பற்றும் இஸ்ரேலிய அழகுராணியான அவிகெய்ல் அல்ஃபொ ட்டோவ் வாள்சண்டையில் அந்நாட்டு தேசிய சம்பியனாக விளங்குகிறார்.
அதே போல், தற்போது சீனாவில் நடைபெறும் உலக அழகுராணி (மிஸ் வேர்ல்ட்) போட்டி களில் பங்குபற்றும் நியூஸிலாந்து அழகு ராணி டெபோரா லம்பீ, ஆயுதம் எதுவும் இல்லாமலேயே மிரள வைக்கிறார்.
24 வயதான டெபோரா லம்பீ, பல்துறை வித்தகர். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் முதலான மொழிகளை பேசும் ஆற்றல் கொண்டவர். கடல் அலைச் சறுக்கல் மற்றும் குதிரை யோட்டப் போட்டிகளிலும் இவர் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
நியூஸிலா ந்தின் ஒட்டாகோ பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டப் படிப்பை பூர்த்தி செய்து இம்மாத முற் பகுதியில் தான் அவர் டாக்டரானார்.
அதன் பின் சில நாட்களில் அவர் உலக அழகு ராணி போட்டிகளில் நியூஸி லாந்து சார்பாக பங்குபற் றுவதற்கு சீனா சென்று விட்டார். இப்போ ட்டிகளில் 113 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்குபற்றுகின்றனர்.
இப்போட்டிகளில் விசேட திறமைக்கான சுற்றில் பலர் இசை, நடனம் போன்ற வற்றில் தமது திறமையை வெளிப் படுத்தினர். ஆனால், டாக்டர் டெபோரா லம்பீ, மேடையேறி யவுடன் ஹக்கா நடன மாடினார்.
சர்வதேச றக்பி போட்டி களில் பங்குபற்றும் ஆல் பிளெக்ஸ் எனும் நியூஸி லாந்து வீரர்கள் ஹக்கா எனும் வீர அறைகூவல் நடனமாடுவது வழக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.
டெபோரா மருத்துவத் துறையில் பட்டம் பெறுவதற்கு முன் தொழில் வாண்மைத் துறையில் முதுமாணி பட்டத்தையும் பெற்றி ருந்தார்.
நான் எந்தளவு நியூஸிலாந்தை நேசிக்கிறேன் என்பதை உணர்வதற்கு இந்த அழகு ராணி போட்டி வாய்ப் பளித்தது.
எமது கலாசா ரத்தை பகிர்ந்து கொள்வதை நான் விரும்புகிறேன் என அவர் கூறுகிறார். அழகுராணி போட்டிகள் டெபோரா வுக்குப் புதிதல்ல.
இவர் 2013 ஆம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் நியூஸி லாந்து அழகுராணி போட்டியில் பங்குபற்றி இரண்டாமி டத்தைப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத் கத்கது.