ஸ்பெயினில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாண்டா பார்பரா தேவாலயம் 50 ஆண்டுகளாக பயன்படுத்தப் படாமல் இருந்து வந்தது. தனியாருக்குச் சொந்தமான இந்தத் தேவாலயத்தை தற்போது திறந் துள்ளார்கள்.
தேவாலயத்தின் இரண்டு சுவர்களையும் இணைக்கும் விதத்தில் அரை வட்ட வடிவில் மரப் பலகைகளை அமைத்து அதில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள் கிறார்கள்.
யாருக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கட்டிடத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்த திட்டமிட்ட மக்கள் தேவையான நிதியைச் சேகரித்து ஸ்கேட்டிங் மையமாக மாற்றி விட்டனர்.
தேவாலய த்தின் கூரையும் ஜன்னல்களும் வண்ணக் கண்ணாடி களால் வடிவமைக்கப் பட்டு விட்டதால் இதன் மூலம் இயற்கை வெளிச்சம் விளையாட் டுக்குக் கிடைக்கிறது.