என் பாடல் பிடிக்கவில்லை எனில் பார்க்க வேண்டாம் | Do not watch if you do not like my song !

சிம்பு என்றாலே அகராதியில் சர்ச்சை என்று இருக்கிறது போலீரு க்கிறது. வெள்ளத் தில் சிக்கி சென்னையே துயரத்தில் ஆழ்ந்தி ருக்க... பாதிக்கப் பட்ட மக்களுக் காக அனைவரும் ஓடி ஓடி உழைத்துக் கொண் டிருக்க...
திடீரென்று இணைய த்தில் ஒரு வக்கிரமான பாடலை லீக் செய்தது சிம்பு - அனிருத் அன் கம்பெனி... அப்பாடலில் உள்ள வரிகள் பல கொச்சையாக இருந்த தால்,

சில இளைஞ ர்கள் மத்தியில் ஆதரவு  இருந்தாலும் பெண்ணிய வாதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித் தார்கள்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சிம்பு, அனிருத் ஆகிய இரு வரையும் கண்டித்து கருத்துக் களைபதி விட்டு வருகி ன்றனர்.

பீப்' பாடல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக யாருடைய கேள்வி க்கும் பதில் சொல்ல முடியாது, என் படுக்கை யறையை யாரும் எட்டிப் பார்க்க வேண்டாம் என்கிற ரீதியில் கருத்து சொன்னதோடு அதற்கான விளக்க த்தையும் கூறியிரு க்கிறார் சிம்பு.

சென்னையே சோகத்தில் மூழ்கியி ருக்க சில நாட்களுக்கு முன்பு இணைய த்தில் 'பீப் சாங்' என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணைய த்தில் வெளியானது. ஆனால், அப்பாடல் அதிகாரப் பூர்வமானது இல்லை என்று கருத்து க்கள் நிலவின.

இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. பலரும் அப்பாடல் சிம்பு எழுதியது தானா, அவருடைய குரல் தானா என்று கேள்வி எழுப்பி னார்கள்.

இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது, "'பீப் பாடல்' வெளியானது பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்பாடலை முதலில் நான் அதிகார பூர்வமாக வெளியிட வில்லை என்று கூறியுள்ளார்.

நானும் அனிருத்தும் இணைந்து பல்வேறு தளங்களில் சுமார் 150 பாடல்களை தயார் செய்து வைத்தி ருக்கிறோம். அதில் இருந்து ஒரு பாடலை முட்டாள் ஒருவன் திருடி வெளியிட்டு இருக்கிறான்.

முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத் திலோ இடம் பெற வில்லை. அது இணை யத்தில் வெளி யிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல் குறித்து ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்றும், பலரும் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வரு கிறார்கள்.
அதே இணையத்தில் தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக் களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதே போல் தான் பாடல் பிடிக்க வில்லை என்றால் கேட்காதீர்கள்.

நான் எனது வீட்டின் படுக்கை யறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டு மானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்க வில்லை. 

என்னைக் கேள்விக் கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷய ங்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணு கிறீர்கள்" என்று கேட்டால் என்ன வாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சில வருடங் களுக்கு முன்பு அன்பை பரிமா றுங்கள் என்று ஒரு பாடல் வெளியி ட்டேன். அப்போது எனக்கு எதிராக கருத்து தெரிவிப் பவர்கள் எல்லாம் எங்கே இருந் தார்கள்.

வீட்டில் தூங்கிக் கொண்டிரு ந்தார்களா? யாருடைய கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதே போல், என்னுடைய பணியைப் பற்றி குறைச் சொல்ப வர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசிய மில்லை" என்று கூறியு ள்ளார் சிம்பு.

திமிர் விளக்கம்

நமக்கெ ன்னவோ சிம்பு, அனிருத் குரூப்பை பார்க்கும் போது சரி தான் "ரெண்டும் ரெண் டாப்பை ரெண்டுங் கழண்டாப்பை" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. இப்படியே பேசுங்க... நீங்க எல்லாம் நல்லா வருவீங்க.
Tags:
Privacy and cookie settings