நாடெங்கும் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ள பீப் பாடல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், “பெண் இனத்தை தவறாக சித்தரிக்கின்ற எந்தவொரு கலை வடிவமும் வரவேற்கத்தக்கது அல்ல” என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவர்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை எனவும் அவர் ஆவேசமாக கேட்டுள்ளார். நடிகர்சங்கத் தேர்தலின் போது நடிகர் சிம்பு, சரத்குமார் அணி சார்பாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போதைய நடிகர் சங்கம் சிம்புவுக்கு ஆதரவாக பேசுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.