படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த... நடிகை !

1 minute read
தமிழில் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீனாட்சி.  இப்படத்திற்கு பிறகு ‘டி.என்.07 ஏ.எல்.4777’, ‘ராஜாதி ராஜா’,
‘மந்திர புன்னகை’, ‘அகம் புறம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ‘வெள்ளக்கார துறை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடன மாடியிருந்தார்.

இவர் தற்போது ‘நேர்முகம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப் பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

இப்படப் பிடிப்பின் போது படத்தின் உதவி இயக்குனரை மீனாட்சி தாக்கி யுள்ளார். உடனே அவர் மயக்க நிலைக்கு சென்றி ருக்கிறார்.

இதை பார்த்த படக்குழுவினர் உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் படப் பிடிப்பில் உதவி இயக் குனரை அடித்த தற்கு மன்னிப்பு கேட்கும் வரை அவர் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று சிறை பிடித்தனர்.

பின்னர் மீனாட்சி படப் பிடிப்பில் இவ்வாறு நடந்ததற்கு மிகவும் வருந்து கிறேன் என்று கூறி மன்னிப்பு கடிதம் எழுதி யுள்ளார்.
அதன் பின்னரே படக் குழுவினர் சமாதானம் ஆகியிருக் கிறார்கள். படப் பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்தது படக் குழுவினர் மற்றும் திரையுலத் தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings