ஆட்கொல்லி நோயாக உருவெடுக்கும் நுரையீரல் நோய்கள் !

2020ஆம் ஆண்டுவாக்கில் நுரையீரல் தொடர்பான நோய்கள் உயிர்பறிக்கும் நோய்களாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 



அதாவது மும்பை நகரில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களில் பாதிப்பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட் டுள்ளது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 10 கோடி மக்கள் நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

பெருநகரங் களில் வாகனப் புகையை சுவாசிக்கும் பெருமபகுதி மக்களுக்கு பல்வேறு விதமான மூச்சுக்குழல் நோய்கள் உருவாகி வருவதாக இந்த ஆய்வு தெரிவித் துள்ளது. 

குறிப்பாக சாலைகளில் பணியாற்றும் போக்கு வரத்துத் துறை காவலர்களில் பெரும்பாலா னோருக்கு நுரையீடல் நோய் இருப்பது தற்போது மும்பையில் தெரிய வந்துள்ளது.

மும்பை செவென் ஹில்ஸ் மருத்துவ மனையில் சுமார் 115 போக்கு வரத்துக் காவலர் களுக்கு

இலவச நுரையீரல் சோதனை நடத்தப் பட்டதில் 45% காவலர் களுக்கு நுரையீரல் பலவீன மடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

20 சதவீதத் கினருக்கு ஆரம்ப நிலை நுரையீரல் பாதிப்புகள் உள்ளன. 



மும்பையின் அதிக வாகனப்புகை கக்கும் ஒரு பகுதியில் போக்கு வரத்துக் காவலராக பணியாற்றி வரும் சுரேஷ் பாட்டீல் என்ற காவலர்

வாகனப் புகையினால் தனது முடி கொட்டி ப்போனதையும், சரும நோய்கள் ஏற்பட்டிரு ப்பதையும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு போக்குவரத்துக் காவலரான சுஹாஸ் பாட்டீல் தனது நிறம் கரிய நிறமானதோடு இரவில் மூச்சு விடுவதில் கடும் சிரமங்கள் தோன்றியி ருப்பதாகவும் கூறுகிறார். 

நுரையீரல் பாதிப்பு பற்றிய அறிகுறிகள் தாமதமாகவே தெரிய வருகிறது.

உடனடி யாகக் கண்டு பிடிக்கப் பட்டால் சிகிச்சை சாத்தியம் என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர். 



காவலர்கள் மட்டுமல்ல பெரு நகரங்களில் நாள் முழுதும் சாலையில் சுற்றும் நபர்களும், சாலை யோரங்களில் கடை கண்ணிகள் நடத்து வோரும் இன்னும் பலரும்

தங்களது நுரையீரலின் நிலைமை குறித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி ஒலித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings