விஜயகாந்த் முன்பு தேமுதிக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி !

கடலூரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தபோது, அவர் முன்பே ஒரு தேமுதிக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், திட்டக்குடி அருகில் உள்ள அருகேரி எனு கிராமத்தின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட தேமுதிக விஜயகாந்த் வந்திருந்தார். அதன் பின் அவர் அங்கிருந்து புறப்பட தயாரானார். 

அவர் அப்போது, எரப்பாவூர் பகுதியை சேர்ந்த தேமுதிக ஒன்றியப் பிரதிநிதி வெங்கடேசன், தனது பகுதியில் வந்து பார்வையிட கூறி விஜயகாந்தை அழைத்துள்ளார். ஆனால் விஜயகாந்த் வர மறுத்து விட்டார். 

இதையடுத்து, அவர் கையில் வைத்திருந்த கேனிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் உற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். உடனே அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:
Privacy and cookie settings