குரங்குகளை போற்றும் வகையிலான திருவிழா !

தாய்லாந்தில் இந்த ஆண்டும் குரங்குகளை போற்றும் வகையிலான திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குரங்குகளை போற்றும் வகையிலான திருவிழா !
லொப்புரி மாகாணத்தில் இந்த திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
தாய்லாந்தின் இந்த குரங்குத் திருவிழா சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் ஒரு நிகழ்வாகும்.

இந்தத் திருவிழா நாளன்று அங்கு குரங்குகளுக்கு சீனர்களின் முறைப்படியான விருந்தோம்பல் நடைபெறுகிறது. 

இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான குரங்குகள் கூடி, உண்டு உறவாடி மகிழ்கின்றன.

குரங்குகளுக்கு உணவு வழங்குவதால் தங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என அங்குள்ள சமூகத்தினர் நம்புகின்றனர்.
‘தோ சின் லிங்’ என்று அழைக்கப்படும் குரங்குகளுக்கான இந்தப் பண்டிகை, வெளிநாட்டவர்களையும் வெகுவாக கவர்ந்தாலும்,
வைரம் பற்றிய நாம் அறியா விஷயங்கள் !
சில சந்தர்ப்பங்களில் தமக்கே உரிய குணங்களை காட்டும் வகையில், மனிதர்களை கடிப்பதும் அவர்களிடமுள்ள பொருட்களை பறித்துச் செல்வதும் நடைபெறவே செய்கின்றன.
Tags:
Privacy and cookie settings