வலங்கைமான் சுன்னத் ஜமாத்தின் வெள்ள நிவாரணப்பணி!

வலங்கைமானில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் :  இயற்கையோடு மனிதன் போராட முடியும். ஆனால் வெற்றி பெற முடியாது என்பது தான் இயற்கையின் நியதி.


இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் போது, பல்வேறு நிவாரணப்பணிகளையும், நிதியுதவிகளையும் வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பது நமது கடமை ஆகும் .

அந்த கடமையை செய்வதற்காக வலங்கைமானில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுன்னத் ஜமாத்தை சேர்ந்த ஜமாத்தார்கள் இன்று காலை கடலூர் சென்றார்கள். கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவிக்கும்   கடலூா் மாவட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் பொருட்டு இவர்கள் தங்களுடன் உணவுப் பொருள்களையும் மற்றும் துணி மணிகளையும் எடுத்து சென்று விநியோகத்தார்கள். 


பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலங்கைமானில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுன்னத் ஜமாத்தை சேர்ந்த ஜமாத்தார்கள் செய்யும் இந்த உதவியை யா அல்லாஹ் நீ ஏற்றுக் கொள்வாய்க


அவர்களின் கஷ்டத்தை போக்கி ரஹ்மத்தையும் பரக்கத்தையும் கொடுத்து அருள் புரிவாய்யாக.
Privacy and cookie settings