புதுவையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுவையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுவை வந்தார். அந்த செய்தியை சேகரிக்க புதுச்சேரி செய்தியாளர்கள் தனித் தனி குழுவாக காரில் புறப்பட்டுச் சென்றனர்.
அப்பொழுது, புதுச்சேரி-கடலூர் எல்லையான ரெட்டிச்சாவடி அருகே தனியார் செய்தியாளர்கள் குழுவின் கார் ஒன்று சென்றபோது எதிர்பாரா விதமாக மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த வாலிபர் காரின் மீது மோதினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி நின்றது. இதில் காரில் பயணித்த சன் டிவி செய்தியாளர் மகாராஜன், ஒளிப்பதிவாளர் வெங்கட், தினமணி போட்டோகிராபர் ரமேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை மற்ற செய்தியாளர்கள் மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த விபத்து குறித்து புதுச்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.