அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கிறது.
பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் சிம்புவும் அனிருத்தும் நாளை ஆஜராக வேண்டும் என கோவையைச் சேர்ந்த காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில்,அனிருத் இசையில் சிம்பு பாடியதாக சொல்லப்பட்ட சர்ச்சைக்குரிய பீப் பாடல் குறித்து நடிகர் சிம்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தொலைப்பேசியின் மூலம் பேட்டியளித்துள்ளார்.
அதில் பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது முழுக்க முழுக்க நான் கம்போஸ் செய்த பாடல் இதில் அனிருத்தை தயவு செய்து இழுத்து விடாதீர்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த நேரத்தில் திரையுலகைச் சேர்ந்த யாரும் தனக்கு ஆதரவாக இல்லை எனவும் குடும்பத்தார் மட்டுமே தன்னுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags: