திருடுவதற்காக புகை கூண்டு வழியாக இறங்கியவர் மூச்சுத் திணறி சாவு

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனை கவனித்துக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் 
அந்த வீட்டில் திருடுவதற்காக வீட்டின் மேற்பகுதிக்கு சென்று புகை கூண்டு வழியாக உள்ளே இறங்கினார். 

புகை கூண்டின் உள்பகுதி சிறியதாக இருந்ததால் அவர் அதன் உள்ளே சிக்கிக்கொண்டார். பின்னர் வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு வந்ததும் குளிர்காய புகை கூண்டுக்கு அடியில் தீயை பற்றவைத்தார்.

இதையடுத்து புகை கூண்டில் சிக்கியிருந்தவர் பயங்கரமாக அலறினார். புகை வெளியேற வழியில்லாததால் வீடு முழுவதும் புகை மண்டலமானது. வீட்டின் உரிமையாளர் தீயை அணைக்க முயற்சித்தார். 

ஆனால் அவரால் முடியவில்லை. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போதுதான் புகை கூண்டில் ஒருவர் சிக்கியிருந்தது தெரியவந்தது. அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

அவர் தீக்காயங்கள் ஏற்பட்டும், மூச்சு திணறலாலும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது பெயர் கால்டுவெல் என்பதும் 19 வயதானவர் என்பதும் தெரியவந்தது.
Tags:
Privacy and cookie settings