பீப் பாடல் விவகாரம் குறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் சிம்பு, அதில் அவர் அளித்திருக்கும் பேட்டியில்,
நான் பெண்களுக்கு ஆதரவாகப் பாடிய பாடலை முழுமையாகக் கேட்காமலே பலர் என்னை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார்கள்.
இதே தமிழ் சினிமாவில் பெண்களைத் திட்டி அடிடா அவள, ஒதைடா அவளை என்று ஏராளமான பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதை யெல்லாம் யாரும் விமர்சிக்க வில்லையே என்று கேள்வி எழுப்பினார்.
அவர் குறிப்பிட்ட அந்தப் பாடலை எழுதி பாடியவர் தனுஷ் என்பதால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இப்பாடல் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கிய ’மயக்கம் என்ன’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் ஆகும்.