இளையராஜாவை சாடியது குறித்து ஜேம்ஸ் வசந்தன் !

நான் ரசிகன் தான், வெறியன் அல்ல என்று இளையராஜாவை சாடியதற்கு ஜேம்ஸ் வசந்தன் விளக்கம் அளித்தி ருக்கிறார்.
இளையராஜாவை சாடியது குறித்து ஜேம்ஸ் வசந்தன் !
கன மழையின் போது வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர் களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை இளையராஜா சந்தித்தார். அப்போது சிம்புவின் 'பீப்' பாடல் குறித்து இளையராஜாவிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 

இதனால் கோபமடைந்த இளையராஜா, 'உனக்கு ஏதாவது இருக்கா? அந்தப் பிரச்சினைக்காகவா வந்திருக்கோம். 

உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு' என்று எதிர் கேள்விகள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இளையராஜாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். 

ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக் கொணர்ந்த அந்த இளம் பத்திரிகை யாளனைப் பாராட்ட வேண்டும்" என்று ட்வீட் செய்து விட்டு, சில மணித் துளிகளில் அதனை டெலிட் செய்து விட்டார். 

அதனைத் தொடர்ந்து அவரை பின் தொடர்பவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, இளையராஜாவை கடுமையாகச் சாடினார். 

அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்தார். இளையராஜாவை சாடியது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது வலைப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அப்பதிவில், "எப்போதெல்லாம் இளையராஜா என்ற பெயரை யாராவது சொல்லக் கேட்கிறேனோ, அப்போது சில விஷயங்களைச் சொல்லத் தோன்றுகிறது. 
நான் என்ன நினைக்கிறேன் என்பதைத் தெளிவாகச் சொல்ல ஆசைப் படுவதாலேயே இந்தப் பதிவு. 

கல்லூரி விழா வொன்றுக்கு வந்திருந்த இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், சமீபத்தில் சர்ச்சைக் குள்ளான பீப் பாடலைப் பற்றிக் கேட்டிருக்கிறார். 

முதிர்ச்சி யில்லாத விதத்தில் தான் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இளையராஜா அந்தக் கேள்வியைக் கொஞ்சம் பொறுமையாக அணுகி யிருக்கலாம். 

(அரை வேக்காட்டுத் தனமான சில நிருபர்களின் அத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமை காப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குப் புரிகிறது).

அவர் இதை அணுகிய விதம் நிச்சயம் இது சரியல்ல என்பதை அவருக்கு உணர்த்தி இருக்காது. 

அதே நேரத்தில், இளையராஜாவின் செயல் மொத்தக் குழப்பத்துக்கும் காரணமாக இருந்த நிருபரின் செய்கையை அவமதிப்பு மன நிலையோடு அணுகி இருக்கிறது.

ஒரு வேளை இந்த விஷயத்தை அவர் முறையாக அணுகி யிருந்தால், மொத்த உலகமுமே இளையராஜாவைப் போல யாருமே இருக்க முடியாது என்று புகழ் பாடியிருக்கும். 

இதற்கு, ஏகப்பட்ட வெறுப்பு செய்திகள் என் இன்பாக்ஸில் வந்து குவியும் என்று தெரியும். ஆனால் நான் சொல்ல நினைத்ததை நிறுத்த மாட்டேன். 

அவரின் இசைக்கு நான் அடிமை. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயத்திலிருந்து என் கண்களை மறைக்க அது உதவாது.
நான் அவரின் ரசிகன்; நிச்சயமாக வெறியன் அல்ல. சாமானியன் ஒருவன் திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்து, விமர்சித்து, குறை கூறி, அழுது, பாராட்டி விமர்சனம் செய்யும் போது, அதைப் பற்றி எதுவுமே தெரியாமல், 

பொது வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு ஒருவன் தாராளமாகத் தன்னுடைய கருத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 

நீங்கள் இதை வேறு மாதிரியாக நினைத்தாலும் பரவாயில்லை. உங்கள் கருத்துக்களை நாகரிகமாகப் பதிவிடுங்கள். 

அதை நான் ஏற்றுக் கொள்ளலாம்; ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். ஆனால் அது நிச்சயமாக மக்களாட்சிக்கு பங்கம் விளைவிக்காது" என்று தெரிவித்திருக்கிறார்
Tags:
Privacy and cookie settings