அரையாண்டு தேர்வுகள் பற்றிய உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்: முதல்வர்

டிசம்பரில் நடக்கவிருக்கும் அரையாண்டுத் தேர்வை ஜனவரி மாதம் ஒத்திவைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: 

பல மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரியவந்துள்ளது. அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். 

இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings