”உங்களுக்கு வரும் துன்பங்களை யெல்லாம் நானே சுமக்கிறேன்…!” என அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் தமிழக மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில் கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து,
மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் உரையாற்றி உள்ளார்.
மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் உரையாற்றி உள்ளார்.
அதில், ”கடந்த 100 ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர்மழை ஏற்படுத்திய வெள்ள ச்சேதங்களால் நீங்கள் அடைந்த துயரத்தை நினைத்து நான் வருந் துகிறேன்.
கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. உங்களோடு எப்போதும் நான் இருக்கி றேன். உங்களுக்கு வரும் துன்பங்களை யெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கு சுயநலம் கிடையாது.
என்னை நீங்கள் ‘அம்மா’ என்று அழைக்கும் ஒரு சொல்லுக்காக என்னை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டி ருக்கிறேன். எத்துயர் வரினும் இந்த தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்” எனக் கூறியுள்ளார்.