பிரதமர் மோடி சென்னையில் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டோஷாப் செய்ததற்கு மத்திய அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு மத்திய அரசின் ஊடகப் பிரிவான பி.ஐ.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிடும் புகைப்படத்தை வெளியிட்டது.
புகைப்படத்தை வெளியிட்ட வேகத்தில் அது போட்டோஷாப் செய்யப்பட்டதை கண்டுபிடித்த மக்கள் பி.ஐ.பி.ஐ விளாசித் தள்ளினர். அதன் பிறகே பி.ஐ.பி. உண்மையான புகைப்படத்தை வெளியிட்டது.
இந்நிலையில் மோடியின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்ததற்காக பி.ஐ.பி. மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து அது கூறியிருப்பதாவது, மோடியின் 7 புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு புகைப்படத்தில் இரண்டு புகைப்படங்களை இணைக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இதை மீடியாக்களில் சில பிரிவு போட்டோஷாப்பிங் என்று கூறுகிறது. அந்த புகைப்படத்தை வெளியிட்டதற்காக பி.ஐ.பி. வருத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.