செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் எனும் கேள்விக்கு பிரிட்டனின் தபால்துறை பதிலளித்துள்ளது.
விண்வெளி வீரராக வேண்டும் எனும் ஆசையுள்ள ஐந்து வயதான ஆலிவர் கிட்டிங்ஸ் இந்தக் கேள்வியை எழுப்பினார்.
இதையடுத்து இந்தக் கேள்விக்கு விடையளிக்க அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸாவின் உதவியை நாடியது பிரிட்டிஷ் தபால்துறை.
பின்னர் நாஸாவுடன் இணைந்து இதற்கான தொகை கணக்கிடப்பட்டு, அதற்கு 17,000 டாலர் செலவாகும் என அந்த சிறுவனுக்கு பிரிட்டிஷ் தபால்துறை அறிவித்தது.
இந்த பதில் கிடைத்தவுடன் “அந்த அளவுக்கு பணமா” என வாயடைத்து போனாராம் அந்தச் சிறுவன்.
அவ்வளவு தபால்தலைகள் ஒட்ட வேண்டுமே எனக் கவலைப்படுகிறாராம் அந்தச் சிறுவன்.