எதை விடவும் வாருங்காலத்தை பற்றி அதிகம் யோசிப்பதே தெளிவான புத்திசாலித்தனம். அந்த விடயத்தில், தொழில்நுட்பமும் சரி, அதை பயன்படுத்துபவர்களும் சரி ஒரு குறையும் வைப்பது இல்லை.
அப்படியாகத் தான், ஒரு பிரிட்டிஷ் குழு இப்படியே சென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்து போக கூடிய
இனமான காண்டாமிருகங்களை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்ப துணைக் கொண்டு இறங்கியுள்ளது.
அதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ஜிபிஆர்எஸ் ட்ராக்கர், ஹார்ட் ரேட் மானிட்டர்ஸ், ஹிட்டன் கேமிரா போன்றவைகளை பயன்படுத்தி
காண்டா மிருக வேட்டைகளை கண்கானித்து, தடுத்து, இன அழிவில் இருந்து காண்டா மிருகங்களை மீட்க திட்டமிட்டுள்ளனர்..!
கண்காணிப்பு கேமிராக்கள் காண்டா மிருகங்களின் கொம்புகளில் துளை போட்டு பொருத்தப்பட்டுள்ளது, இது தான் காண்டா மிருகங்களுக்கு அதிக வலி தராத முறை என்பதும் குறிப்பிடத்தக்கது..!