சீனாவில் தூய்மையான காற்று பட்டிலில் அடைத்து விற்பனை !

சீனாவில் காற்று மாசடைந்து வரும் நிலையில் கனடா நிறுவனம் ஒன்று தூய்மையான காற்றைப் போத்தலில் அடைத்து விற்பனை செய்கின்றது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டது. 
இதனால் தலைநகரில் அமைந்துள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் கட்டுமானப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

சீனாவின் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலை யங்கள் மூலமாக வெளியே றுகிற புகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டு மல்லாது

குளிர் காலத்தில் வீடுகளில் வெப்ப மேற்றுவ தற்கு நிலக்கரி எரிப்பதால் வெளியேறும் புகையாலும் காற்று மிக மோசமாக மாசடை கின்றது.

இதனால் அங்கு எப்பவுமே இல்லாத அளவிற்கு பனி மூட்டத்தால் பனிப் புகை ஏற்பட்டுள்ளது. மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன மக்கள் காற்றை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக தனியார் நிறுவனம் ஒன்று கனடாவில் உள்ள பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை போத்தலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது
Tags:
Privacy and cookie settings