போர் விமான என்ஜினை உருவாக்கும் இந்தியா !

ஆளில்லா போர் விமானத்தின் 'கட்டாக்' என்ஜினை உருவாக்கும் புதிய திட்டத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடியை இந்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது. ஏற்கனவே, காவேரி திட்டத்தின் கீழ் இலகு ரக போர் விமானங்களுக்கான என்ஜின்களை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. 
ஆனால், அவை பிரம்மாண்ட போர் விமானங்களின் தேவைகளை பூர்த்தி செய்யாது என்பதால் தற்போது மறுஅவதாரமாக சற்று மாற்றம் செய்யப்பட்டு அவுரா (AURA) என்ற பெயரில் புதிய திட்டம் உருவாகிறது. 

இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் டி.ஆர்.டி.ஓ தலைமையிலான திட்டத்திற்கு ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கைவிடப்பட்ட 

காவேரி திட்டத்திற்கு மாற்றாக தற்போது அறிமுகமாகும் கட்டாக் என்ஜின் திட்டம் தனியார் துறையின் பங்களிப்புடன் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:
Privacy and cookie settings