முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கும் அடுத்தப் படம் !

மஞ்சப்பை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்க விருக்கிறார். அதற்கான அறிக்கையை சற்குணம் வெளியிட் டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ எனது தயாரிப்பு நிறுவனமான “A Sarkunam Cinemaz”ன் முதல் படமான மஞ்சப்பை திரைப்படத்தை எனது உதவியாளர் ராகவன் இயக்கினார். 

இப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது. இதை தொடர்ந்து எனது நிறுவனத்தின் இரண்டாவது படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

இக்கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப் பட்டுள்ளது. இப்படத்தை நான் இயக்கிய களவானி முதல் சண்டிவீரன் வரை என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் திகிலூட்டும் கிரைம் திரில்லராக நகைச்சுவை கலந்த திரைக்கதையில் அமைக்கப் பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்பட வுள்ளது” இவ்வாறு அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings