வெள்ளத்தில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டைப் குழந்தைகள் !

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராமா புரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
வெள்ளத்தில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டைப் குழந்தைகள் !
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் தீப்தி வேல்சாமி (29). நிறைமாத கர்ப்பிணியான அவர் சென்னையில் டிசம்பர் முதல் வாரம் பெய்த கன மழையால், வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை.

அப்போது மீட்பு பணியிலிருந்த இந்திய விமானப் படையின் 'சீட்டா' என்ற ஹெலிகாப்டர் மூலம் டிசம்பர் 2 ஆம் தேதி மீட்கப்பட்ட தீப்தி முதலில் தாம்பரம் விமான மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மேலும், மழை வெள்ளத்தால் அவரது மருத்துவ ஆவணங்கள் அனைத்தும் சேதமடைந்தன. 

இதையடுத்து அவர் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். 

மருத்துவ மனையின் கணினியில் இருந்த ஆவணங்கள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரு நாள்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 4 ஆம் தேதி அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. தீப்தி விமானப் படையினார் மீட்கப்பட்ட போது அவரது கணவர் கார்த்திக் பணி நிமித்தமாக பெங்களூரூ சென்றிருந்தார். 

எங்களுக்கு பிறந்துள்ள இரட்டை தேவதைகளை கண்ட போது, எங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் மறந்து விட்டோம். இப்போது அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். 
சரியான நேரத்தில் எங்களுக்கு உதவிய இந்திய விமானப்படை அதிகாரிகள் அனைவருக்கும் உரிய நன்றியை தெரிவிக்கிறேன் என்றார். தீப்தி தவிர, மேலும் மூன்று கர்ப்பிணி பெண்களை விமானப் படையினர் மீட்டுள்ளனர். 

கிண்டி அருகேயுள்ள மெடும் பாக்கத்திலிருந்து சுகன்யா (29) என்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் தனது 3 வயது மகனுடன் மீட்கப்பட்டார்.

எங்களது அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளம் வரை தண்ணீர் வந்துவிட்டால் நாங்கள் நான்காவது மாடிக்கு குடிப்பெயர்ந்தோம். 

விமானப் படையினர் எங்களை மீட்கும் வரை, எங்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லை என்றார் சுகன்யா.
Tags:
Privacy and cookie settings