பேஸ்புக் முஸ்லீம்களுக்கு எப்போதும் திறந்திருக்கும் மார்க் !

அமெரிக்காவில் முஸ்லீம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான டோனால்டு டிரம்ப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
இந்நிலையில், நீங்கள் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

ஃபேஸ்புக் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கூறியுள்ளார். பாரிஸ் தாக்குதல் என்னை மிகவும் பாதிக்க செய்தது. 

இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களால் மற்ற முஸ்லிம்கள் மீது அதே மாதிரியான பார்வை ஏற்பட்டுவிடும் என்பதே எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யூதரான எனக்கு எனது பெற்றோர்கள் எந்த மதத்தினரையும் தாக்கக் கூடாது என்று அறிவுறுத்தி வளர்த்திருக்கின்றனர். 

இந்த நேரத்தில் முஸ்லீம்களுக்கு ஆதரவான எனது நிலைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

ஃபேஸ்புக் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். அதன் வழியாக நீங்கள் உரிமையோடு உங்களது கருத்தை தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings