சென்னை மாநகரில் கொட்டி தீர்த்த மழை, நகர மக்களின் சகிப்பு தன்மைக்கும், சமய ஒற்றுமை யையும் வெளிப்படுத்தி யுள்ளது. கழுத்து அளவு நீரில் இருந்து காப்பாற்ற ப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஒருவர்,
தன்னை காப்பாற்றிய இஸ்லாமியர் நினைவாக அவரது பெயரையே தன் குழந்தைக்கு சூட்டியு ள்ளார். டிசம்பர் முதல் வாரம் பெய்த கன மழையில் சென்னை மாநகரமே ஏறத்தாழ தண்ணீரில் தத்தளித்தது.
பெரும் பாலான குடியிருப் புகளில் தண்ணீர் புகுந்த நிலையில் நிறைய வீடுகளின் தரைத்தளம் முழுவதும் மூழ்கியது.
பெரும் பாலான குடியிருப் புகளில் தண்ணீர் புகுந்த நிலையில் நிறைய வீடுகளின் தரைத்தளம் முழுவதும் மூழ்கியது.
வெள்ளத்தில் சிக்கியவர் களுக்கு ஜாதி, மதம் பாராமல் பல்வேறு இடங்களி லிருந்து உதவிக் கரம் நீட்டப் பட்டன. வெள்ளத்தின் போது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச் சியான சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
சென்னை நுங்கம் பாக்கத்தைச் சேர்ந்தவர் யூனிஸ். முதுநிலை பட்ட தாரியான இவர், கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி
பெய்த கன மழையை தொடர்ந்து, கடுமையான வெள்ளம் பாதித்த ஊரப்பாக்கம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டி ருந்தார்.
அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் கடுமையான வலியால் அலறினார். யூனிஸ் அங்கு சென்று பார்த்த போது
நிறைமாத கர்ப்பிணி யான சித்ரா என்ற அந்த பெண், கழுத்தளவு நீரில் பிரசவ வேதனையால் அவதியுற்றது தெரியவந்தது.
இதையடுத்து, சித்ராவை படகு மூலம் பெருங்குளத் தூருக்கு எடுத்த சென்ற யூனிஸ் அங்கிருந்த ஒரு மருத்துவ மனையில் அனுமதித்து விட்டு, மீண்டும் நிவாரணப் பணிக்கு திரும்பி விட்டார்.
சில நாள்களுக்குப் பின் யூனிஸின் தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள தாகவும்,
அதற்கு யூனிஸ் என்று பெயர் சூட்டியுள்ள தாகவும் சித்ராவின் கணவர் மோகன் குறிப்பிட்டி ருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யூனிஸ், நான் இன்னும் அக்குழந் தையை சென்று பார்க்க வில்லை. என்னால் மட்டும் சித்ரா காப்பாற்ற படவில்லை.
என்னோடு இணைந்து பணியாற்றிய நண்பர்கள் மற்றும் படகு உதவி அளித்த பெசன்ட் நகர் மீனவர்க ளுக்கும் இதில் பங்கு உண்டு என்றார்.
ஊரப்பாக்கத் திலிருந்து பெருங் குளத்தூர் வரை படகில் சென்ற அந்த 15 நிமிஷம் என்பது மறக்க முடியாதது. மேலும், அக்குழந்தை யின் முழு படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக வாக்களித் துள்ளார் யூனிஸ்.
இதனிடையே வெள்ளத்தால் தானும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் மோகன் தனது வருமா னத்தின் 50 சதத்தை வெள்ள நிவாரணப் பணிக்கு வழங்கி யுள்ளார்.
மனிதம் இன்னும் சாகவில்லை என்பதையே இச்சம்பவம் நினைவுப் படுத்துகிறது.
Tags: