பாபிசிம்ஹாவைப் பத்தி பேசுறதே வேணாம்... ரேஷ்மி மேனன் !

இனிது இனிது படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ரேஷ்மிமேனன். தொடர்ச்சியாக ‘தேநீர் விடுதி’, ‘பர்மா’, படங்கள் மூலம் தமிழுக்குப் பரிச்சயம்.
பாபிசிம்ஹாவைப் பத்தி பேசுறதே வேணாம்... ரேஷ்மி மேனன் !
தமிழில் ஹிட் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அழகிய முகம், பக்கத்து வீட்டுப் பெண் என்பதை விட பக்கத்து வீட்டில் இப்படி ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம் கண்டிப்பாக ரேஷ்மி மேனனைக் காணும் இளசுகளுக்குத் தோன்றும்.

பேஸிக் கேரளா ஆனா வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னை தான், கலகலவென ஆரம்பித்தார் ரேஷ்மி மேனன்.

உங்களைப் பத்தி சொல்லுங்களேன்?

யூகேஜியில இருந்து சென்னைதான். விஷுவல் கம்யூனிகேஷன் வுமன்ஸ் கிரிஸ்டியன் காலேஜ்ல படிச்சேன். இப்ப சொல்லுங்க நான் சென்னை தானே. நான் செம ஃப்ரண்ட்லி..

எப்படி சினிமாவுக்குள்ள வந்தீங்க?
மீடியாவுல ஆர்வம் அதிகம். வீட்லயும் நல்ல சப்போர்ட். உனக்கு என்ன சரின்னு படுதோ அதையே செய்யுன்னு சொன்னாங்க. 

பிரகாஷ் ராஜ் சாரோட டூயட் மூவீஸ் மேலயும் நல்ல அபிப்ராயம். என் மேல செம நம்பிக்கை. நான் கரெக்டா தான் முடிவெடுப்பேனு. அதுனால முதல் படம் ‘இனிது இனிது’.

உங்க டயட்? பியூட்டி ரகசியம் பத்தி சொல்லுங்களேன்?

டயட்லாம் பெரிசா ஏதும் கிடையாது. தோணுனா யோகா செய்வேன். நான் பேஸிக்கலி ஒரு ஃபூடி(Foody). நெறைய சாப்பிடுவேன், வித விதமா சாப்பிடுவேன். நெறைய ரெஸ்டாரண்ட்லாம் தேடிப் போய் சாப்பிடுவேன்.

நேரம், பணம் இது ரெண்டையும் எதுக்கு அதிகமா செலவு பண்ணுவீங்க?

ஷாப்பிங்(யோசிக்காமல் சொன்னார்). நெறையா ட்ரஸ், ஷூஸ், பேக்ஸ் வாங்குவேன். மேக்கப் செலவு கொஞ்சம் கம்மிதான். நிறையா ஷாப்பிங் பண்ணுவேன். கொஞ்சம் அதிகமா புக்ஸ் படிப்பேன்.

ஃபிக்‌ஷன், த்ரில்லர்,க்ரைம் நாவல்கள் பிடிக்கும். ஏதாவது முக்கியமான வேலைன்னா மட்டும் தான் எழுந்து போவேன். அப்படி புக்ஸ் பைத்தியம். இப்போ கொஞ்சம் நாளா முடியலை.
ஷூட்டிங் பிஸி. கண்டிப்பா திரும்ப புக்ஸ் படிக்க ஆரம்பிக்கணும். ஏன்னா ரிலாக்ஸா இருந்தா எந்த விஷயத்தையும் ஃபேஸ் பண்ண முடியும். 

ரிலாக்ஸ்க்கு புக்ஸ் பெரிய ஹெல்ப் பண்ணும். அதனால எக்ஸாம் நேரத்துல கூட ஏதாவது புக்கை ஒரு ரெண்டு பேரா படிச்சுட்டு என்னை நானே கூல் பண்ணிட்டுப் போவேன்.

நீங்க என்ன மாதிரி கேரக்டர்?

நிறையாப் பேசுவேன். சத்தியமா அமைதியான பொண்ணு இல்ல. பழகுற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருப்பேன் அப்பறம் அவ்ளோ தான். பேசிகிட்டே இருப்பேன்.

அடுத்தடுத்த படங்கள் பத்தி சொல்லுங்களேன்?

‘உறுமீன்’, ‘கிருமி’, ‘நட்பதிகாரம்’, அப்பறம் ஒரு சீக்ரெட் ‘மாயா’ படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணியிருக்கேன். 

‘மிஷ்கின் சாரோட ‘சவரகத்தி’ படத்துல ஒரு ரோல். ரெண்டு படங்களுக்கு பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு, தெலுங்குல ரெண்டு படம்.

எந்த மொழில நடிக்கறது ரொம்ப ரிஸ்க்?
மலையாளம் பேஸிக், ஆனாலும் மொழி கத்துக்கிட்டு நடிச்சிகிட்டு இருக்கேன். ஆனால் ரிஸ்க் எதும் இல்லை.

நிறையப் படங்கள்ல நடிக்கிறீங்களே? எந்த படத்தோட கேரக்டர் உங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு? நட்பதிகாரம் படத்தோட கேரக்டர் ரொம்ப நல்ல கேரக்டர். கனமான ரோலும் கூட.
பாபிசிம்ஹாவைப் பத்தி பேசுறதே வேணாம்... ரேஷ்மி மேனன் !
கிசு கிசு பத்தி?

அது வரும் போகும் அதை ஏன் டிஸ்டர்ப் பண்ணிகிட்டு. பேசுவாங்க அப்பறம் மறந்துடுவாங்க..

கொஞ்சம் டெரர் கேள்வி..பாபி சிம்ஹா?

அதுக்கு இப்போதைக்கு எந்தப் பதிலும் இல்ல. இப்போது எங்களுக்குப் படம் தான் முக்கியம். இன்னும் ரெண்டு படங்கள் வேற இருக்கு. ’உறுமீன்’ ரெடியாயிடுச்சு. இது மட்டும் தான் எனக்கு ஒரே சிந்தனை.

அப்போ நீங்க மறுப்பு குடுக்கலாமே?

இதப் பத்தி பேசுறதே வேணாம்னு நினைக்கிறேன். திரும்ப ஒரு நியூஸ் ஆகும் எதுக்கு. அப்படியே போகட்டும் என்ன வருதோ வரட்டும். நாளைக்கே வேற நியூஸ் வந்தா இத மறந்துடுவாங்க.

ரேஷ்மிய எப்படி இம்ப்ரஸ் பண்ணலாம்?
எனக்கு ரொம்ப ஹானஸ்ட்டா இருந்தா பிடிக்கும். கொஞ்சம் கூட போலித்தனம் இல்லாம சிம்பிளா இருந்தா ஈஸியா இம்ப்ரஸ் பண்ணிடலாம். பாய்ஸ் ரெடியா.
Tags:
Privacy and cookie settings