உயர்கல்வியை சீர்குலைக்கும், 'காட்ஸ்' ஒப்பந்த்தில், இந்தியா கையெழுத்திடக் கூடாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: உலக வர்த்தக அமைப்பு உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும், 10வது மாநாடு, கென்யா தலைநகரில் நடந்து வருகிறது.
சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய, 'காட்ஸ்' ஒப்பந்தத்தில், கையெழுத்திட வேண்டிய அபாயம், இந்தியாவுக்கு உள்ளது. இந்த உடன்படிக்கை யால், உயர் கல்வியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
கலைஞர் சொல்லுவதில் இருக்கின்ற உள் அர்த்தங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும், எப்பொழுதும் அவர் எது சொன்னாலும் கேலி பேச ஒரு கூட்டம் இங்கே இருக்கின்றது, அவர்களுக்கு இங்கே நல்லது நடப்பதை விட அந்த நல்ல கார்யங்கள் இவரால் நடந்துவிட கூடாது என்று இந்த கூட்டங்களின் குறிகோள்.
கலைஞர் எப்பொழுதும் மாணவர்களின் நலனின் அக்கறை உள்ளவர் அதனால் தான் சமச்சீர் கல்வி, இலவச பஸ் பாஸ் என்று மாணவர்களுக்கு கொடுத்தார், இங்கே கேலிபேசும் கோமாளிகளுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை, தெரிந்தாலும் அதை ஏற்று கொள்ள மனம் இல்லை.
இந்தியாவில் உள்ள, பல்கலைக் கழக மானியக் குழு, உயர் கல்வி தொழில் நுட்பக் குழு, மருத்துவ கவுன்சில் ஆகியன கலைக்கப்பட்டு, தற்சார்பு ஒழுங்கு முறை ஆணையங்கள் அமைக்கப்படும்.
இதனால், வெளிநாட்டு மூலதனம் வருவதோடு, இட ஒதுக்கீடு மற்றும் இந்திய மொழிகளுக்கு பங்கம் ஏற்படும். இந்திய பாடத் திட்டத்தை, அமல்படுத்த முடியாது; கல்வி முதலீடுகளைப் பாதுக்காக்கவே சட்டங்கள் உருவாக்கப்படும்.கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், எப்போதைக்கும், அதிலிருந்து பின் வாங்க முடியாது. 'ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், நாட்டின் உயர் கல்வித் துறைக்கு பேராபத்து ஏற்படும்' என, கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால், இதையும் மீறி, பார்லிமென்ட் நடக்கும் வேளையில், அங்கு விவாதிக்காமல், ஒப்புதல் இல்லாமல், உடன்படிக்கையில் கையெழுத்திட, மத்திய அரசு முயற்கிறது.
எனவே, இந்த ஒப்பந்தத்திலிருந்து, மத்திய அரசு உடனடியாக விடுவித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.