நடிகர்கள் சிவ கார்த்திகேயன், விக்ரம் பிரபு, சிபிராஜ் ஆகியோர் கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டப்படுகிறது. முதல் கட்டமாக சூர்யா, விஷால், தனுஷ் ஆகியோர் நிவாரண நிதிக்கான காசோலையை அளித்தனர்.
இதனை அடுத்து நேற்று நடிகர்கள் சிவ கார்த்திகேயன் ரூ. 5 லட்சம், விக்ரம் பிரபு ரூ.5 லட்சம், சிபிராஜ் ரூ.2.25 லட்சமும் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கான காசோலையை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் அளித்துள்ளனர்.
உடன் நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன், உறுப்பினர்கள் நந்தா, பிரேம்குமார் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.