பிரபல நடிகர் தற்கொலை செய்யவில்லை – மனைவி உருக்கம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் (63). காமெடி நடிகரான இவர் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் திபுரான் நகரில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். 
அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பல லட்சம் ரசிகர்களை சிரிக்க வைத்து மகிழ்ந்த ராபின் வில்லியம்ஸ் கடுமையான மன அழுத்ததில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ராபின் வில்லியம்ஸ் இறந்து ஒர் ஆண்டிற்கு மேல் ஆன நிலையில் முதன் முறையாக அவரது மனைவி சூசன் வில்லியம்ஸ் பொதுவெளியில் பேசினார். 

அப்போது, தன்னுடைய கணவர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்யவில்லை என்றும் நோய்வாய்பட்டு தான் இறந்தார் என்றும் கூறினார். 

உடல்-தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர் விரைவிலேயே இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார். அவருக்கு அதிர்ஷ்டம் இருந்திருந்தால் மேலும் 3 வருடங்கள் உயிருடன் இருந்திருக்கலாம் என்றும் ராபின் வில்லியம்ஸ் மனைவி உருக்கமாக பேசினார்.
Tags:
Privacy and cookie settings