போயஸ் தோட்டத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் கோலோச்சுவார். இப்போது கார்டனின் இளவரசன் விவேக் ஜெயராமன். சசிகலாவின் அண்ணியான இளவரசியின் மகன்.
அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரமட்டத்தில் விவேக் ஜெயராமன் பெயர் பயபக்தியுடன் உச்சரிக்கப்படுகிறது. காதில் சிறிய கம்மல், ஃபேஸ்புக்கில் அரட்டை, விலை உயர்ந்த டுகாட்டி பைக் என விவேக்கின் உலகம் இந்த தலைமுறைக்கானது.
இவை எல்லாம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரைதான். ஜெயலலிதாவின் பார்வைபட்ட தினத்தோடு விவேக்கின் ஜாலி உலகம் முடிவுக்கு வந்துவிட்டது. அரசியல் பஞ்சாயத்துகள் எதிலும் சிக்காமல் ஜாஸ் சினிமாஸை வளர்த்து எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் விவேக்.
'இன்னும் ஐந்து மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டத்தில் அதிகம் அடிபடப் போவது விவேக் பெயராகத்தான் இருக்கும்' என்கிறார்கள்!