சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றியும், குடிநீர், உணவு இன்றியும் தவித்து வருவதால், இந்த மக்கள் எப்படி வாழப்போறங்க தெரியலையே என்று நடிகை குஷ்பு கவலையுடன் கூறியுள்ளார்.
சென்னை மாநகரம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மாநகரின் பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
தென் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். வெள்ளநீரில் நடந்து சென்று மக்களிடம் ஆறுதல் கூறிய குஷ்பு, அடைமழையால் மக்கள் பெரும் துயரை சந்தித்துள்ளதாக கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, மூணு நாளா தொடர்ந்து மழை பெய்யுது, கரண்டு இல்லை, குடிக்க தண்ணியில்லை, சாப்பாடு இல்லாம மக்கள் கஷ்டப்படுறாங்க.
எப்படிதான் வாழப்போறாங்க தெரியலை என்று கூறினார் குஷ்பு. இதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள் என்றார்.