தன்னை பாதுகாத்துக் கொள்ள துருக்கிக்கு உரிமை உண்டு !

ரஷ்ய போர்விமானம் ஒன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் பறந்ததாக கூறி துருக்கி ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. ஆனால், அவ்வாறு துருக்கி எல்லைக்குள் நுழைய வில்லை என ரஷ்யா திட்ட வட்டமாக தெரிவித்து விட்டது. 
இதையடுத்து, ரஷ்யா, துருக்கி நாடுகளுக்கு இடையே அமைதி யின்மை நிலவு கிறது. துருக்கி யுடனான உறவை ரஷ்யா உடனடியாக மறு பரிசீலனை செய்தது.

இந்நிலை யில், ஆரம்பத்தில் இருந்தே துருக்கிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வரும் அமெரிக்கா இன்று மீ்ண்டும் ஆதரவை பதிவு செய்து ள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா துருக்கி அதிபர் தாயிப் ஏரடோ கனை நேரில் சந்தித்து பேசினார். 

அப்போது, துருக் கிக்கு தனது வான் எல்லையை பாது காத்துக் கொள்ள உரிமை உண்டு எனவும் பதற்றத்தை குறைக்க ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை பற்றி விவாதி த்ததாகவும்,

இந்த பிரச்ச னையை முடிவுக்கு கொண்டு வர ராஜாங்க ரீதியான பாதையை தேர்ந் தெடுக்க வேண்டும் எனவும் ஒபாமா தெரி வித்தார்.
Tags:
Privacy and cookie settings