வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் பீரோவை சுத்தம் செய்யாதீர்கள்.. சுஹாசினி !

சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இப்போது தான் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. 
வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் பீரோவை சுத்தம் செய்யாதீர்கள்.. சுஹாசினி !
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவப் பலரும் முன்வரும் நிலையில் சிலர், தாங்கள் பயன்படுத்திய, அதே சமயம் பிடிக்காத, பழைய துணிகளையும் கொடுத்து வருகிறார்களாம்.

இதைச் சுட்டிக்காட்டி சுஹாசினி முகநூல் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பாதுகாப்பாக உதவுங்கள், கண்ணியமாகக் கொடுங்கள், உங்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் பொருட்களைக் கொடுக்காதீர்கள்.

உங்களுக்குப் பிடிக்காத உடைகளை அப்புறப்படுத்த இந்த வெள்ளத்தை பிரயோகிக்காதீர்கள். பயன்படுத்திய பழைய உடைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்.

நான் ரேகா பயன்படுத்திய உடைகளை பயன்படுத்தி யிருக்கிறேன். வாணி கணபதி பயன்படுத்திய உடைகளை எடுத்துக் கொண்டுள்ளேன். 

என் ஜீன்களை என் சகோதரிகளான நந்தினியும், சுபாஷினியும் பயன்படுத்தி யுள்ளார்கள். எனது சிப்பான் சேலைகளை பயன்படுத்த உமா பத்மநாபன் ஆசைப் பட்டுள்ளார். 
ஆனால் தி.நகரைச் சேர்ந்த ஒரு கலையரசியும், முகப்பேரைச் சேர்ந்த பொன்மொழியும், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மனோன்மணியும் எனது சேலைகள், பயன்படுத்திய உள்ளாடைகளை போட்டுக் கொள்ள என்ன தேவையிருக்கிறது?.

அவர்களுக்கு ஏன் நாம் புதுச் சேலைகள் வாங்கித் தரக்கூடாது. 120 ரூபாய்க்கு சேலைகள் கடைகளில் இல்லையா? ஓரளவு நல்ல நிலையில் கொஞ்சம் புதிதான உடைகளோ,

பயன்படுத்திய உடைகள் என்றால் உங்களது உறவினர்கள், சகோதரிகளுக்குக் கொடுங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய துணிகளைக் கொடுங்கள்”.

உங்கள் பீரோவையோ, அலமாரிகளையோ காலியாக்கி நீங்கள் உதவத் தேவையில்லை. உண்மையான பாதுகாப்பான நோக்கத்துடன் உதவுங்கள்” எனக் கூறியுள்ளார்.

சுஹாசினியின் வார்த்தைகள் கண்டிப்பாக பயன்படுத்திய பழைய ஆடைகளைக் கொடுத்துத் தன்னை சமூகநல ஆர்வலர் எனக் காட்டிக் கொண்டு செல்ஃபி போட்டுக் கொள்ளும் சிலருக்குச் சாட்டையடி என்றே கூறலாம்.
Tags:
Privacy and cookie settings