மோட்டார் வாகன பாலிஸி வகைகள் !

மோட்டார் வாகன பாலிஸிகள் இரு வகைகள் உள்ளன. ஒன்று நம் வாகன பாதிப்புக்கு, (அதாவது ஓன் டேமேஜ்)… அடுத்து நம் வாகனத்தால் மற்றவர் களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு (அதாவது தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ்).
 
மூன்றாம் நபர் பாலிஸி 

நம்முடைய வாகனம் மோதி, யார் என்றே தெரியாத மூன்றாம் நபர் காயமடைந் தாலோ, உயிரிழந் தாலோ அல்லது அவர்கள் ஓட்டி வந்த வாகனத்து க்கு சேதம் ஏற்பட்டாலோ இழப்பீடு கொடுப்பது நமது கடமை. 

இந்த இழப்பீட்டை வழங்க பலருக்கு வசதி வாய்ப்பு இருக்காது. சிலருக்கு வசதி இருந்தாலும் கொடுக்க மனது இருக்காது. இது போன்ற நிலையில் கை கொடுப்பது தான் மூன்றாம் நபர் பாலிஸி (Third Party Insurance அல்லது Act Only Policy ).
பால் சாப்பிடுவது அவசியம்தானா?
இதன்படி, பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனமே இழப்பீட்டை வழங்கி விடும். வாகன ஓட்டிகள் இந்த பாலிஸி எடுப்பது கட்டாய மாக்கப்பட்டு இருக்கிறது. 


தனி நபர் பாலிஸி 

‘மூன்றாம் நபருக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பா? வாகனத்தை ஓட்டும் எனக்கு இல்லையா’ என்று கேட்டால், அதற்கு தனி நபர் விபத்து பாலிஸி என ஒன்று இருக்கிறது. 
 
அதாவது, வாகனத்தின் உரிமையாளர் விபத்தில் உயிர் இழந்தாலோ அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தாலோ இழப்பீடு வழங்குவது தான் இந்த தனி நபர் விபத்து பாலிஸி.

இது, மூன்றாம் நபர் பாலிஸியோடு துணை பாலிஸியாகச் சேர்த்து எடுக்கலாம்.  ஆனால், இதற்குச் சற்று கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டும்.. மூன்றாம் நபர் பாலிஸி எடுத்திருக்கும் போது, உங்கள் வாகனம் மோதி யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் சொந்தப் பணத்தை இழப்பீடு கொடுக்காதீர்கள். 
‘இவ்வளவு நஷ்டஈடு தருகிறேன்’ என்று யாருக்கும் வாக்குறுதி தராதீர்கள். மேலும், மூன்றாம் நபருக்கு எந்த இழப்பீடு தருவதாக இருந்தாலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைக் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள். 

மூன்றாம் நபரின் சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட்சம் 6,000 ரூபாய் மட்டும்தான் இழப்பீடு உண்டு. கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் இதனை ஒரு லட்ச ரூபாயாக (இரு சக்கர வாகனம்), அல்லது 7.5 லட்ச ரூபாயாக (கார்) அதிகரித்துக் கொள்ள முடியும். 
 தனி நபர் பாலிஸி
கவரேஜ் தேர்ட் பார்ட்டி பாலிஸியில் எவை யெல்லாம் கவர் செய்யப்பட்டு இருக்கிறது? தேர்ட் பார்ட்டி பாலிஸி எடுத்திருப்ப வரின் வாகனம் மோதி மூன்றாம் நபர்களுக்கு ஏற்படும் கீழ்க்கண்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு உண்டு. இறப்பு உடல் காயம் சொத்துகளு க்குச் சேதம் வழக்கு செலவு மற்றும் கிளைம் கோருவதற் கான செலவு. 

ஓன் டேமேஜ் பாலிஸி – சுய பாதிப்பு 

விபத்து என்று மட்டு மில்லாமல் மழை – வெள்ளம், தீ, திருட்டு என்று எந்த வடிவத்தில் வாகனத்துக்குச் சேதம் நிகழ்ந்தாலும், அந்தப் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்வது தான் ஓன் டேமேஜ் பாலிஸி (Own Damage Policy).  இது கட்டாய மாக்கப்பட வில்லை என்பதால், இதனை எடுப்பவர்கள் மிகக் குறைவு.


இந்த பாலிஸியில் தீ விபத்து, குண்டு வெடித்தல், வாகனம் தானே தீப்பற்றிக் கொள்ளுதல், மின்னல் தாக்குதல், கொள்ளை, கலவரம் மற்றும் போராட்டம், பூகம்பம் (தீ மற்றும் நில அதிர்வால் சேதம்), வெள்ளம், புயல், தீவிரவாத செயல்களாலும் சாலை, ரயில், கப்பல், விமானம்,
பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?
லிஃப்ட், எலிவேட்டர் போன்றவற்றில் எடுத்துச் செல்லும் போது சேதம் அடைந்தாலும், நிலம் மற்றும் பாறை சரிவு போன்ற காரணங்க ளாலும் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு /சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். 
 ஓன் டேமேஜ் பாலிஸி – சுய பாதிப்பு
சுருக்கமாகச் சொன்னால், தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் – வாகனத்தின் மூலம் பிறருக்கு ஏற்படும் இழப்பையும், ஓன் டேமேஜ் பாலிஸி – வாகன உரிமை யாளருக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஈடு செய்யும் விதமாக அமையும். 

ஒருங்கிணைந்த பாலிஸி மேற்கண்ட இரு வகையான பாலிஸிகளின் பலன்களை ஒரு சேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிஸி. அதாவது (Comprehensive policy), விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் எடுக்கும் பாலிஸியாக இது இருக்கிறது. 

பிரீமியம் எப்படி நிர்ணயிக்கிறார்கள்? 

மோட்டார் இன்ஷூரன்ஸில் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பிரீமியம் நிர்ணயிக்கப் படுகிறது.  பொதுவாக, வாகனத்தின் திறன் (Cubic Capacity), மாடல் (உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு), காரின் பயன்பாடு, ஓட்டப்படும் பகுதி, பாலிஸிதாரர்

இதற்கு முன் கிளைம் செய்த விவரம், இன்ஷூரன்ஸ் தொகை, பிராண்ட் மதிப்பு (குறிப்பாக, வாகனத்தின் மறுவிற்பனை விலை) போன்ற வற்றைப் பொறுத்து பிரீமியம் அமையும்.

தேர்ட் பார்ட்டி பாலிஸி 


மூன்றாம் நபர் பாலிஸிக்கான பிரீமியம், வாகனத்தின் செயல் திறனைப் பொறுத்து அமையும். இரு சக்கர வாகனங் களுக்கு 250 சிசி-க்குக் கீழ் மற்றும் 250 சிசி-க்கு மேல், கார்களுக்கு 1200 சிசி-க்குக் கீழ் மற்றும் 1200 சிசி-க்கு மேல் என்பதைப் பொறுத்து இது அதிகரிக்கிறது. அதாவது சிசி அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் அதிகமாகும். 

ஓன் டேமேஜ் பாலிஸி 
ஓன் டேமேஜ் பாலிஸிக்கான பிரீமியம் வாகனத்தின் சந்தை மதிப்பு மற்றும் வாகனத்தின் செயல் திறனைச் சார்ந்திருக்கும். இதிலும், சிசி அடிப்படையில் பிரீமியம் மாறுபடும். இந்த பாலிஸியில் வாகனத்துக்கு ஏற்படும் சேதம் தவிர, வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர் களையும் கூட கூடுதலாக பிரீமியம் செலுத்தி ‘கவர்’ செய்ய முடியும்.
Tags:
Privacy and cookie settings