கடல் அன்னையின் கோரத் தாண்டவத்தின் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த அழிவு பல இலட்சம் மக்களை காவு கொண்டு, உலகையே ஒரே நாளில் சோகத்தில் ஆழ்த்திள துயர நாள் இன்று.
கடந்த 2004ஆம் ஆண்டு இது போன்ற ஒரு நாளில் காலை பொழுதில் இலங்கை உள்ளிட்ட இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் சற்றும் எதிர்பார விதமான சுனாமி அலை தாக்கியிருந்து.
இந்த அனர்தத்தில் பல இலட்ச மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்ட அதேவேளை பல ஊர்கள் இடம் தெரியாமல் அழிக்கவும் பட்டது. ஆண்டுகள் என்னவோ பல கடந்தாலும் ஆழிப்பேரலையின் தாக்கம் மற்றும் இதன் விளைவுகள் இன்றும் எவறாலும் மறக்க முடியாதுள்ளது.
கடலையே நம்பி வாழ்ந்த மக்களை கடலே காவு கொண்ட இந்த சம்பவத்தில் இலங்கையில் மாத்திரம் 38 ஆயிரத்து 195 உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2005ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. இதன் போது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகள் பெருவாறியாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, காலி, போன்ற மாவட்டங்களில் பெருமளவில் சேதமேற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் படி இன்று காலை 9.25 மணி முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறயினும் இந்த ஆழிப்பேரலையின் பிடியில் சிக்குண்டு போனவர்களின் வாழ்க்கை இன்று சீர் செய்யப்படாமலிருப்பது வருந்தத்தக்க ஒரு விடயமே.