ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் உற்பத்தி பாதிப்பு !

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தால் இது வரை, 11,200 ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டடுள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித் திள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை யில் திரு வொற்றியூர் மற்றும் ஒரகடத்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்

ஆலைகள் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரண மாக கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் மூடப் பட்டிருந்தன. 

இந்நிலையில், அந்த ஆலைகளில் திங்கள் கிழமை முதல் உற்பத்தி துவங்கி யுள்ளன.
பெரும் பாலான தொழிலா ளர்கள் இன்னும் பணிக்கு வராதது மற்றும் போதுமான வாகன உதிரி பாகங்கள் சப்ளை இல்லாதது 

உள்ளிட்ட காரணங்களால் தற்போது, மோட்டார் சைக்கிள் உற்பத்தி 50 சதவீத அளவிற்கே உள்ளது.

நவம்பர் மாதத்தில், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, 4,000 சரிவடைந்திருந்த நிலையில்,

தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால் டிசம்பர்1 முதல் 6ஆம் தேதி வரை ஆலைகள் மூடப்பட்டதால் கூடுதலாக 7,200 மோட்டார் சைக்கிள் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.
இதனால் மழை யால் மொத்தம், 11,200 ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கி ள்கள் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. 
அடுத்த வாரம் முதற் கொண்டு, ஆலைகளில் 100 சதவீத உற்பத்தியை எட்டு வதற்குத் திட்ட மிடப்பட் டுள்ளது" என்று அந்நி றுவனம் கூறியுள்ளது.
Tags:
Privacy and cookie settings