அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான செலீனா கோமஸ் ஸெட்லெனா எனும் இளைஞரை காதலிப்பதாக பரபரப்பு செய்திகள் முன்னர் வெளியாகின.
22 வயதான செலீனா கோமஸ் கனடாவைச் சேர்ந்த பாடகர் ஜஸ்டின் பைபரை காதலித்து வந்தார். இவர்கள் அடிக்கடி பிரிவதும் மீண்டும் இணைவதுமாக இருந்தனர்.
இந்நிலையில் தற்போது செலீனாவும் ஜஸ்டின் பைபரும் பிரிந்துவிட்டனர் எனவும் செல்டனாவும் செலீனாவும் காதலிக்கின்றனர் எனவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செலீனா கோமஸ், தற்போது தனது புதிய வீடியோ அல்பம் ஒன்றிற்காக நிர்வாணமாக படம் எடுத்துள்ளார். இந்த புகைபடத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.