இன்றைய அவசர உலகில் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபட ரஷ்யாவில் ‘டேபோஷ்’ என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதாவது ஓர் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி, அலமாரி, அலங்காரப் பொருட்கள், மேஜை எல்லாம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
கவச ஆடையை அணிந்து கொண்டு, ஒரு பெரிய சுத்தியலுடன் அறைக்குள் செல்ல வேண்டும்.
எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் !
விரும்பும் வரை பொருட்களை சுத்தியலால் அடித்து நொறுக்க வேண்டும். இப்படிப் பொருட்களை நொறுக்கும் போது மன அழுத்தம் குறைந்து, சாதாரணமாகி விடுவார்கள்.
உடைத்திருக்கும் பொருட்களின் அளவுக்கு ஏற்ப 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
மாஸ்கோவில் ஆரம்பித்த இந்தத் திட்டம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.