இணையம் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிர்ச்சி தரும் அறிக்கை !

இணையம் இரண்டு முகங்களை கொண்டது. நமக்குத் தேவையான அனைத்து தகவல் களையும் உடனடியாக தருவது ஒரு முகம். ஆபாசம், ஹேக்கிங், ஸ்பாம் என்று வக்கிரங்களை காட்டுவது மற்றொரு முகம்.
இணையம் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிர்ச்சி தரும் அறிக்கை !
சமீபத்தில் இந்தியாவில் இணையக் குற்றங்களை பற்றி இணையப் பாதுகாப்பு நிறுவனமான நார்டன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்து வோரில் 48 சதவீதம் பேர் பைசர் கிரைம் குற்றங் களால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்தியாவில் 11.3 கோடி மக்கள் சராசரியாக 16,000 ரூபாவை இணையத் திருடர்களிடம் இழக்கி ன்றார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக் கின்றது. இது சர்வதேச அளவில் சராசரியாக ரூ. 23,878 ஆக உள்ளது.

அப்பாடா நம்மை விட மற்றவர்கள் கூடுதலாக இழக்கிறார்கள் என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியது தான். 

பொதுவாக பைசர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு டெபிட் கார்டு மூலம் இணையத்தில் பண பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உட்பட கணக்கு விவரங்களைத் திருடுவது, 

பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவை தான் தற்போது பெருகி வருகின்றன.

54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியா மலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன் லைனில் திருடப் படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

40 சதவீதத்தினர் மட்டுமே பைசர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக் கிறார்கள். 60 சதவீத த்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர்.

17 நாடுகளில் 17,125 நபர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்தியாவில் 1,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. உலகிலேயே இணையத்தை பயன் படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய இணையம் தற்போது அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பதைத் தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. 

1980 களுக்குப் பிறகு பிறந்த வர்களில் 31 சதவீதம் நபர்கள் தங்களது கடவுச் சொல்லை மற்றவர் களிடம் பகிர்ந்து கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

பாஸ்வேர்டு களை பயன் படுத்தும் போது 8 எழுத்துக்கள், நம்பர், அடையாள ங்களை 41 சதவீதம் பேர் மட்டுமே சரியாக பாதுகாப்பாக பயன்படுத் துகிறார்கள்.

இப்படி அடிப்படை பாதுகாப்பு களையே சரியாக செய்யாததன் விளைவு தான் இந்த இணையக் குற்றங்கள் அதிக மானதற்கு காரணம் என்று சொல்லப் படுகிறது. என்ன நடக்கிறது

என்று கூடத் தெரியாமல் குற்றங் களில் ஈடுபடுவதால் பெரும் பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள்

என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல் களையும் கொடுத்து விடுகிறோம். இந்த தகவல்கள் யாரே ஒருவரால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவ தில்லை.
 இணையம் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிர்ச்சி தரும் அறிக்கை !
இதனுடன் பணத்தையும் இழப்பது தான் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இணையத் திருடர்களை பற்றி புகார் அளிக்கவும் சிலர் தயங்கு கிறார்கள்.

போதுமான விழிப்புணர்வு இணையப் பயன்பாட்டாளர்களிடம் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. நமது தகவல் களை குறைந்த பட்சம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலே இந்த பிரச்சினை யிலிருந்து எளிதாக விடுபடலாம்.

தொழில் துறை உலகம் மிகவும் போட்டிகள் நிறைந்த ஒன்று. அதிலும் குறிப்பாக ஆட்டோ மோபைல் துறையில் போட்டி களுக்குப் பஞ்சமே யில்லை. போட்டி நிறுவனம் புதிதாக எதை அறிமுகப் படுத்தப் போகிறது. 

அதை முறியடிக்கும் வகையில் நாம் எந்த தயாரிப்பை சந்தைப் படுத்தலாம் என நிறுவனங்கள் தினசரி போராட்டிக் கொண்டு தானிருக்கின்றன.

போட்டி ஒரு புறம் என்றால், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நிறுவனம் சரிவைச் சந்திக்கிறது என்றால் அது மற்ற நிறுவனங் களுக்கு கொண்டாட்டம் தான். 

வெளிப் படையாக அதைக் காட்டிக் கொள்ளா விட்டாலும், ஒழிந்தான் வீரகேசரி என்கிற பாணியில் தங்களது தயாரிப்புகளை மேலும் சந்தைப் படுத்த முயற்சிப் பார்கள்.

அம்பாசிடர் கார் உற்பத்தி நின்று போய் விட்டது. தேவூ நிறுவனத்தின் சியல்லோ, மாடிஸ் கார்கள் இனி வராது என்பதெல்லாம் வாடிக்கை யாளர்களுக்குத் தான் வருத்தமான விஷயம். 

ஆனால் மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது மகிழ்ச்சியான விஷயம். அந்நிறுவன தயாரிப்பு களுக்குப் பதில் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் விற்கலாம் என்பது தான் அதற்குக் காரணம்.

ஓற்றர்கள்
நிறுவனங் களிடையே வேவு பார்ப்பதற் கென்றே சில நிறுவனங்கள் ஆள்களை நியமிப்பது உண்டு. இத்தகைய ஒற்றர்கள் நிறுவனத் தயாரிப்பு குறித்து போட்டி நிறுவன ங்களுக்கு தகவல்களை அளிப்பது அவ்வப்போது நிகழ்வது தான்.

ஜேர்மனியின் போக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் புகை அளவு சாப்ட்வேர் மோசடி வெளியானதன் பின்னணியில் இது போன்ற ஓற்றர்களின் பங்கு உள்ளதாகக் கூறப் படுகிறது. 

அது வேறு விஷயம். இப்போது இந்தப் பிரச்சினையில் நூற்றாண் டுகளாக காப்பாற்றி வந்த நற் பெயரை இழந்து மீள வழி தெரியாமல் தவிக்கிறது போக்ஸ்வேகன். 

இதேபோல இப்போது பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. டகடா எனும் ஜப்பான் நிறுவனம். கார்களில் உயிர் காக்கும் காற்றுப் பைகளை (ஏர் பேக்) தயாரிக்கிறது டகடா நிறுவனம்.

ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் என்பதால் இந்நிறுவன த்தின் ஏர் போக்குகள் இல்லாத ஜப்பானிய கார்களே இல்லை என்று கூறலாம். இந்த அளவுக்கு டகடா ஏர் பேக்குகள் மிகவும் பிரபலம்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா வின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கார் விபத்துகளில் உயிரைக் காக்க வேண்டிய ஏர் பேக்குகளால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல மலேசியாவில் நிகழ்ந்த கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டகடா ஏர் பேக்குகளில் அமோனியம் நைட்ரேட் வாயு வெளியேறியதோடு அதிலிருந்து

ஆணி போன்ற கூர்மையான பொருள்கள் வெளியேறி உயிரைப் பறித்துள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

இதை யடுத்து டகடா நிறுவனம் தயாரித்த ஏர் பேக்குகள் பொருத்தப்பட்ட கார்களை திரும்பப் பெறுவதாக பெரும் பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்தன. மொத்தம் 3.4 கோடி ஏர் பேக்குகளை டகடா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. 

கார் தயாரிப்பில் அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கொரியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டி ருந்தாலும் ஜப்பானிய தயாரிப்புகளின் டயர்கள் படாத சாலைகளே உலகில் இல்லை என்ற அளவுக்கு ஜப்பானிய கார்கள் எங்கும் வியா பித்துள்ளன.
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்த டகடா நிறுவன த்தின் ஏர் பேக்குகளை வாங்கி பயன்படுத்தின.

இப்போது உயிர் காக்க வேண்டிய ஏர் பேக்குகளே எமனாக மாறியதால் தங்களது நிலைப் பாட்டிலிருந்து மாற வேண்டிய நிர்பந்தத் துக்கு இவை தள்ளப் பட்டுள்ளன.

ஏறக்குறைய 4 கோடி கார்களை திரும்பப் பெற்று அவற்றில் டகடா ஏர் பேக்குக ளுக்குப் பதில் மாற்று ஏர் பேக்குகளைப் பொருத் தித்தர வேண்டிய கூடுதல் சுமை கார் தயாரிப்பு நிறுவனங் களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் டொயோடா, நிசான் ஆகிய நிறுவனங்கள் டகடா ஏர் பேக்குகளை வாங்கப் போவ தில்லை என அறிவித்துள்ளன. இதைப் போல ஹோண்டா உள்ளிட்ட பெரும்பலான நிறுவனங்கள் டகடா நிறுவன ஏர் பேக்குகளுக்கு டாடா கூறி விட்டன.

டகடா ஏர்பேக்குகளில் அமோனியம் நைட்ரேட் வாயுதான் பிரச்சினை. இதை படிப்படி யாகக் குறைத்து 2018 ஆம் ஆண்டுக்குள் அமோனியம் நைட்ரேட் பயன் பாட்டை முற்றிலுமாக நிறுத்தப் போவதாக டகடா நிறுவனம் அறிவித்து விட்டது.

ஆனாலும் இந்நிறுவனத் தயாரிப்புகள் இழந்த புகழை மீண்டும் பெறுவதும், சந்தையில் முதலிட த்தைப் பிடிப்பதும் என்பது அவ்வளவு எளிதான தல்ல.
டகடா நிறுவனத்தின் வீழ்ச்சி தற்போது ஸ்வீடனின் ஆட்டோ லிவ் நிறுவன த்துக்குச் சாதகமாக அமைந்து விட்டது. இந்நிறுவன ஏர் பேக்குகளை இப்போது பெருமளவிலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கி யுள்ளன.
Tags:
Privacy and cookie settings