நானும் ரவுடிதான், வேதாளம் என தொடர்ந்து 2 வெற்றி படங்களில் நடித்ததால், மன்சூர் அலிகான் காட்டில் மழை.
தூயவன் மகன் வைத்தீஸ்வரன் டைரக்ஷனில், 'இட்லி,' திரைவண்ணன் டைரக்ஷனில், 'சிம்மக்கல் சேகர்,' ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'புரூஸ்லீ' உள்பட 6 புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஒரு படத்தில் டாக்டர், இன்னொரு படத்தில் வில்லன், மற்றொரு படத்தில் அரசியல்வாதி என்று எல்லாமே வித்தியாசமான வேடங்கள்.
''என் நடிப்பை இப்போதுதான் பயன்படுத்திக்கொள்கிறார்கள்'' என்று சந்தோஷப்படுகிறார், மன்சூர் அலிகான்!