லித்தியம் பேட்டரி வாகனங்களுக்கு விமானத்தில் அனுமதி இல்லை – மாஸ் !

சிறிய லித்தியம் பேட்டரிகள் உள்ள வாகனங்களை பயணிகள், விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு மலேசியா ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 
தனிநபர் இயக்க கருவிகள், ஏர்வில், சோலோவீல், சிறிய ரக செக்வே போன்றவற்றின் இயக்கத்திற்காக சிறிய லித்தியம் பேட்டரிகள் பயன்படுகின்றன. 

பெரும்பாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் இந்த கருவிகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வாகனங்கள் மூலம் தீப்பற்றும் வாய்ப்பு இருப்பதால் இதற்கு தடை விதிக்கப்பதாக மாஸ் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “லித்தியம் பேட்டரிகள் உள்ள வாகனங்களை விமானத்தில் ஏற்றுவதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம். 

இந்த தடை அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது
Tags:
Privacy and cookie settings